செய்திகள் :

வெறிநாய் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்!

post image

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் வெறிநாய் ஒன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள், நின்று கொண்டிருந்தவர்களை கடித்துவிட்டு சென்றதால் 20க்கும் மேற்பட்டோர் காயமைடந்தனர்.

காயமடைந்தவர்கள் சங்ககிரி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட ஓ.ராமசாமி நகர், பவானி பிரதான சாலை, மத்தாளிகாலனி, பழைய எடப்பாடி சாலை, நகராட்சி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் நடந்து சென்றவர்கள், நின்று கொண்டிருந்தவர்கள் என 20க்கும் மேற்பட்ட நபர்களை வெறி நாய் ஒன்று கடித்துவிட்டு சென்றுள்ளது.

இதில் காயமடைந்த நகராட்சி துப்பரவு மேற்பார்வையாளர் அழகேசன் (55), விஜயகுமார் (47), குமார் (57), ஸ்ரீனிவாசன் (55) உள்ளிட்ட பலர் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தலைமை மருத்துவ அலுவலர் சரவணகுமார் தலைமையிலான மருத்துவர்கள் காயமைடந்தவர்களுக்கு தடுப்பூசியும், குலுக்கோஸும் செலுத்தி வருகின்றனர். தலைமை மருத்துவர் காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி அறை ஓதுக்கீடு செய்து கண்காணித்து வருகிறார். அரசு மருத்துவமனையில் 496 நாய்க்கடிமருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தகவலறிந்து வந்த நகராட்சி ஆணையாளர் எஸ்.சிவரஞ்சனி, நகராட்சி துணைத்தலைவர் ஆர்.வி.அருண்பிரபு, திமுக நகர செயலாளர் கே.எம்.முருகன் ஆகியோர் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஒரு வெறி நாய் கடித்து ஒரு சமயத்தில் பலர் காயமடைந்ததால் சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெரு நாய்களைக் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

இந்து முன்னணி மாவட்ட செயலருக்கு அரிவாள் வெட்டு; மனைவி கொலை: போலீஸ் விசாரணை

பரமத்திவேலூர் அருகே இந்து முன்னணி மாவட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிவிட்டு, அவரது மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பொத்தனூர் ... மேலும் பார்க்க

ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! மதுரை வைகையில் மக்கள் வெள்ளம்! - (புகைப்படங்கள்)

தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பச்சை பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால், நாடு செழிக்கும் என்று நம்பப்படுகிறது. ஸ்ரீவில்லிபு... மேலும் பார்க்க

சென்னை- திருத்தணி இடையே குளிா்சாதன மின்சார ரயில்: பயணிகள் எதிா்பாா்ப்பு

த. மணிமாறன்சென்னை- அரக்கோணம் மாா்க்கத்தில் திருத்தணி வரை குளிா்சாதன வசதி கொண்ட மின் ரயில்கள் இயக்கப்படுமா என பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா்.சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் பேசின்பிரிட்ஜ்,... மேலும் பார்க்க

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில், தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழ... மேலும் பார்க்க

ரேபிஸ்: அச்சம் தவிா்.. தடுப்பூசி தவறேல்..!

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடா்ந்து எடுத்து வருகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடா்பாக 9 அம்ச செயல் திட... மேலும் பார்க்க

மருத்துவ கல்லூரிகள் தரவரிசை வரைவு: கருத்து கேட்கிறது என்எம்சி!

மருத்துவ கல்லூரிகளுக்கு தரவரிசை மற்றும் அங்கீகாரம் அளிப்பதற்கான வரைவு திட்ட அறிக்கை மீதான கருத்துகளையும் பரிந்துரைகளையும் அனுப்பலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக எ... மேலும் பார்க்க