செய்திகள் :

`7 வருடங்கள் கழித்து கருத்தரித்தேன், ஆனால்...'- அலட்சிய சிகிச்சையால் இரட்டைக் குழந்தைகளை இழந்த பெண்!

post image

L0தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள எலிமினேடு கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி. இவர் 5 மாதங்களுக்கு முன்பு ஐவிஎஃப் மூலம் கருத்தரித்திருக்கிறார்.

கடந்த மாதம் மருத்துவ பரிசோதனைக்காக விஜய லட்சுமி மருத்துவமனை சென்றபோது, கீர்த்தியின் கர்ப்பபை தளர்ந்திருப்பதை கவனித்த மருத்துவர் ரெட்டி, அவருக்கு அதற்கேற்ற தையல் சிகிச்சை அளித்து ஓய்வெடுக்க அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:00 மணி அளவில் கீர்த்திக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அந்த நேரத்தில் மருத்துவர் இல்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் செவிலியர்களுக்கு, மருத்துவர் ரெட்டி மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

ஊசி போடுவது உட்பட பல மருத்துவ நடைமுறைகளை செவிலியர்கள் வீடியோ காலில் மருத்துவர் கூறியதன்படி செய்திருக்கின்றனர்.

கீர்த்தியின் வயிற்றிலிருந்து இரட்டைக் குழந்தைகள் அகற்றப்பட்டுள்ளன. மருத்துவர் ரெட்டி வந்தபோது கீர்த்தியின் குழந்தைகள் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கீர்த்தி கூறுகையில், "எனக்கு வயிறு வலி ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தோம். மருத்துவர் இல்லை என கூறி, மருத்துவர் தொலைபேசியில் செவிலியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அவரின் அறிவுறுத்தல் பேரில் சிகிச்சையை தொடங்கினார்கள் செவிலியர்கள்.

எனக்கு ரத்தப்போக்கு தொடங்கி, என் குழந்தைகள் வெளியே வந்த பிறகுதான் மருத்துவர் அங்கு வந்தார். குழந்தைகள் இறந்து விட்டதாக அவர்கள் சொன்னார்கள். மருத்துவர் ரெட்டி என்னை பரிசோதிக்கவே இல்லை . ஏழு ஆண்டுகள் பின், கருத்தரித்து குழந்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இப்படி நேர்ந்துவிட்டது" என மனம் உடைந்து கீர்த்தி கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக கீர்த்தியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து மருத்துவ அலட்சிய பிரிவுகளின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடுமிப்பிடி சண்டையில் இறங்கிய பள்ளி முதல்வர் - நூலகர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன? | Video

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியின் முதல்வருக்கும் நூலகருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிர... மேலும் பார்க்க

அல்காட்ராஸ்: தீவு சிறையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு - சிறைச்சாலை சுற்றுலா தலமாக மாறியது எப்படி?

சிறைச்சாலையாக இருந்து பின்னர் மூடப்பட்டு சுற்றுலாத்தலமாக செயல்பட்டு வரும் அல்காட்ராஸ் "தீவு சிறையை" மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவின் கடுமையான சிறைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த அ... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா டு `The One' சூர்யவன்ஷி; இந்த வார கேள்விகள்!

கட்டாய கடன் வசூலுக்கெதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் திருமண முன்பணம் தொகை உயர்வு, தாதே சாகேப் பால்கே விருது என இந்த வாரத்தில் நிகழ்ந்த பல நிக... மேலும் பார்க்க

பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது... இணையத்தில் வைரலாகும் `1947' அறிவிப்பு!

`இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கு செல்கிறீர்களா?' என்று 1947 இல் வெளியான ஒரு அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் இந்திய சுற்றுலா பயணிகள் உட்பட 26... மேலும் பார்க்க

அட்சய திருதியை: பைக்கில் தங்கத்தை டெலிவரி செய்யும் Swiggy Instamart - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஆந்திராவில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஆன்லைன் டெலிவரி நிறுவனம் லாக்கரில் வைத்து தங்கத்தை எடுத்துச் செல்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காய்கறி முதல் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வரை வாடிக்... மேலும் பார்க்க

அனுமார் அருளால் செயல்படும் காவல் நிலையம்; வைரலாகும் மத்தியப் பிரதேச காவல் நிலையத்தின் பின்னணி என்ன?

காவல் நிலைய பொறுப்பாளர் அல்லது அதிகாரிகளால் ஒரு காவல் நிலையம் நடத்தப்பட்டு இருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தை ஹனுமார் இயக்குவதாக நம்பப்படுகிறது... மேலும் பார்க்க