செய்திகள் :

அட்சய திருதியை: பைக்கில் தங்கத்தை டெலிவரி செய்யும் Swiggy Instamart - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

ஆந்திராவில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஆன்லைன் டெலிவரி நிறுவனம் லாக்கரில் வைத்து தங்கத்தை எடுத்துச் செல்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காய்கறி முதல் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வரை வாடிக்கையாளர்களுக்கு குறைந்த நேரத்தில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் டெலிவரி செய்து வருகிறது.

ஸ்மார்ட் போனில் இருந்து, தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்தது வீட்டிலிருந்தே ஆன்லைன் டெலிவரி மூலம் அதனை பெற்றுக்கொள்கிறார்கள்.

இந்த நிலையில் அக்ஷய திருதியை முன்னிட்டு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் டெலிவரி செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து வாடிக்கையாளர் பலரும் ஆன்லைனில் தங்க நாணயத்தை வாங்கி வருகின்றனர்.

கல்யாண் ஜுவல்லர்ஸ் உடன் இணைந்து ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட மற்றும் சான்றிதழ் அளிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை சில நிமிடங்களிலேயே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக கூறியது.

வாடிக்கையாளரின் தங்க ஆர்டரைத் தொடர்ந்து அதனை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் டெலிவரி கொடுப்பதற்காக ஒரு பாதுகாவலரோடு, லாக்கரில் தங்கத்தை வைத்து எடுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது... இணையத்தில் வைரலாகும் `1947' அறிவிப்பு!

`இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கு செல்கிறீர்களா?' என்று 1947 இல் வெளியான ஒரு அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் இந்திய சுற்றுலா பயணிகள் உட்பட 26... மேலும் பார்க்க

அனுமார் அருளால் செயல்படும் காவல் நிலையம்; வைரலாகும் மத்தியப் பிரதேச காவல் நிலையத்தின் பின்னணி என்ன?

காவல் நிலைய பொறுப்பாளர் அல்லது அதிகாரிகளால் ஒரு காவல் நிலையம் நடத்தப்பட்டு இருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தை ஹனுமார் இயக்குவதாக நம்பப்படுகிறது... மேலும் பார்க்க

``எல்லாமே மாறிவிட்டது'' - 16 வருடத்துக்குப் பிறகு இந்தியா வந்த நபரின் வைரல் வீடியோ!

இங்கிலாந்தைச் சேர்ந்க காண்டன்ட் கிரேயேட்டர் ரால்ஃப் லெங். இவரின் குழந்தைப்பருவம் இந்தியாவில் கழிந்திருக்கிறது. அதற்குப் பிறகு சில காரணங்களால் அவர் தன் குடும்பத்துடன் மீண்டும் இங்கிலாந்து சென்றுவிட்டார... மேலும் பார்க்க

புனே விமான நிலையத்திற்குள் வலம்வந்த சிறுத்தை; பதைபதைப்பில் மக்கள்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

புனே விமான நிலையத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்து சுற்றிப் பார்த்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.விமான நிலையத்தில் காலை 7 மணிக்குத் தடுப்புச் சுவரில் ஏறிக் குதித்து விமான நிலையத்தி... மேலும் பார்க்க

"என்னோட நிலைமை யாருக்குமே வரக்கூடாது; ஆனாலும்... " - Rahul Tiky மனைவி தேவிகாஶ்ரீ பேட்டி

நகைச்சுவை வசனங்களுக்கு வாயசைப்பது, நகைச்சுவை வீடியோக்களை பதிவுசெய்து சிரிக்க வைப்பது எனப் பிரபலமடைந்த காமெடி யூடியூபர் ராகுல் டிக்கி, சாலை விபத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி உயிரிழந்த சம்பவம், அவரை சமூ... மேலும் பார்க்க

AI Mazu: பக்தர்களுக்கு ஆசி வழங்கும் டிஜிட்டல் தெய்வம்.. மலேசிய தியான்ஹோ கோயிலில் AI வழிபாடு

இன்றைய நவீன உலகில், அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்த நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சுகாதாரம், பராமரிப்பு தொடங்கி பொழுதுபோக்கு வரை செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு பெரி... மேலும் பார்க்க