Kingdom: `இந்த மேதை யாரென..' - அனிருத்துக்கு காதல் கடிதம் எழுதிய விஜய் தேவரகொண்டா!
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் 'கிங்டம்' திரைப்படம் இம்மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
'ஜெர்சி' பட இயக்குநர் கெளதம் டின்னனூரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாகியிருக்கிறது.

இதையொட்டி, தற்போது விஜய் தேவரகொண்டா அனிருத்துக்கு ஒரு காதல் கடிதத்தை எழுதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், "நாங்கள் ஒரு காதல் பாடலை வெளியிடும் இந்தத் தருணத்தில், அனிருத்திற்கு என்னுடைய சிறிய காதல் கடிதம் இது.
'VIP' மற்றும் '3' படங்கள் வெளியான காலத்திலிருந்தே நான் அனிருத்தின் பெரிய ரசிகன். இந்த மேதை யார் என நான் ஆச்சரியப்பட்டேன்.
ஒருநாள் நான் நடிகனானால், அவருடைய இசை என் படத்தில் ஒலிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
இன்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய 13-வது திரைப்படம் 28 நாள்களில் வெளியாகவுள்ள நிலையில், அனிருத்-விஜய் தேவரகொண்டாவின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.

இந்தத் தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியான மனிதனாகவும், மகிழ்ச்சியான நடிகனாகவும் இருக்கிறேன்.
இன்று முதல் நாங்கள் எங்கள் உலகத்தையும் உணர்வுகளையும் உங்களுக்குத் திறந்துவிடுகிறோம்.
இது உங்களுக்கு மகிழ்ச்சியையும் நினைவுகளையும் கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடன்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...