கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி!
கோவாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
கோவாவின் ஷிர்கா பகுதியில் உள்ள லைராய் தேவி கோயிலில் புகழ்பெற்ற ஜாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை பக்தர்கள் சரிவான பாதையில் வந்துகொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த டிரோன்களும் பயன்படுத்தப்பட்டன. இருந்தும் விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.