பத்ரிநாத் கோயில் இன்று அதிகாலை திறப்பு! ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி வரவேற்பு
STR 49: `கல்லூரி மாணவராக சிம்பு!' - பூஜையுடன் தொடங்கிய சிம்புவின் 49-வது படம்
சிம்புவின் 49-வது திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. சிம்புவுடன் கயாடு லோகர், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இவர்களை தாண்டி படத்தில் சிம்புவுடன் சந்தானமும் முக்கியக் கேரக்டரில் நடிப்பதற்கு கமிட் செய்யப்பட்டிருக்கிறார்.
கடைசியாக சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் இணைந்து நடித்திருந்தார் சந்தானம்.

அதன் பிறகு சந்தானம் நடித்த ‘சக்கப் போடு போடு ராஜா’ படத்திற்கு சிம்பு இசையமைத்திருந்தார்.
நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைவதால் பெரிய எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
‘சிம்புவுக்கு என்றும் நோ சொல்லமாட்டேன்’ என ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்திற்கான ஆனந்த விகடன் நேர்காணலிலும் சந்தானம் கூறியிருந்தார்.
ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்தை ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
சுயாதீன பாடல்கள் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்த சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கல்லூரி பின்னணியை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகவிருக்கிறது.
படத்தில் சிம்பு கல்லூரி மாணவராக நடிக்கவிருக்கிறாராம்.

படத்திற்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா கமிட்டாகியிருக்கிறார்.
தேசிங்கு பெரியசாமி இயக்கும் சிம்புவின் 50-வது படத்திற்கும் மனோஜ் பரமஹம்சாதான் ஒளிப்பதிவு செய்கிறார்.
சிம்புவின் 49-வது திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியிருக்கிறது.
இந்தப் பூஜையில் படக்குழுவினர் பலரும் பங்கேற்றிருக்கிறார்கள்.