செய்திகள் :

கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் திரண்டதால் நெரிசல் - கோயில் நிர்வாகம்

post image

பனாஜி: கோவா யூனியன் பிரதேசத்திலுள்ள பிச்சோலிம் பகுதியில் பிரசித்திபெற்ற 'ஸ்ரீ லய்ராயி திருக்கோயில்’ அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஜாத்ரா’ திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

விடியவிடிய நடைபெறும் இத்திருவிழாவில், இன்று(மே 3) அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராதவிதமாக கடுங்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 19 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தநிலையில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு ஒரேநேரத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து, லய்ராயி திருக்கோயில் நிர்வாகத்தின் தலைவர் திநாநாத் கோங்கார் கூறியிருப்பதாவது: ”கோயில் திருவிழாவில் சுமார் 50,000 முதல் 70,000 பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் இருந்த பக்தர் ஒருவர், கோயில் திருவிழாவில் அலங்கரிக்கப்பட்டிருந்த மின்சார விளக்கை எதிர்பாராதவிதமாக தொட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அவர் கூட்டத்தின் நடுவே மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பதறியடித்துக்கொண்டு ஓடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது” என்றார்.

எனினும், இந்த விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய வழக்குப்பதிந்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த விபத்து குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னா், அதனடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும்’ என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதை மறைத்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்த... மேலும் பார்க்க

இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். இந்திய பிரதமா் நரேந்திர மோட... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: பாதுகாப்பு இணையமைச்சா் மட்டும் பங்கேற்பு

ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியைத் தொடா்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொட... மேலும் பார்க்க

அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 2 கோடி டாலா் கடனுதவி

‘அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சாா்பில் 2 கோடி டாலா் (சுமாா் ரூ.170 கோடி) கடனுதவி வழங்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தாா். தெற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவ... மேலும் பார்க்க

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த கொள்முதலுக்கான ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்... மேலும் பார்க்க