பத்ரிநாத் கோயில் இன்று அதிகாலை திறப்பு! ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி வரவேற்பு
Dhoni : 'நாங்க கண்டிப்பா இதை செஞ்சே ஆகணும்!' - டாஸில் தோனி
'RCB vs CSK'
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸை சென்னை அணி வென்றிருக்கிறது. சென்னை அணி முதலில் பந்துவீசுகிறது.

'டாஸில் தோனி!'
டாஸில் தோனி பேசியவை, 'நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். எஞ்சியிருக்கும் 4 போட்டிகளையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். எந்தெந்த வீரர்கள் அணிக்குள் செட் ஆவார்கள் என்பதை கண்டடைய வேண்டும். வெற்றி பெறுவது முக்கியம்தான்.
ஆனால், இந்த 4 போட்டிகளையும் நாங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். பேட்டர்கள் அவர்களின் பலத்தை உணர்ந்து ஆட வேண்டும்.

பௌலர்கள் நாம் வீசுவது சரியாக இருக்குமா என யோசிக்காமல் தங்களுக்கென ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டு அதை நம்பிக்கையோடு செயல்படுத்த முனைய வேண்டும்.' என்றார்.
சென்னை அணியின் ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை.