செய்திகள் :

Kohli: `RCB-யில் ஆரம்ப நாள்களில் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த வீரர்' - நினைவுகள் பகிரும் கோலி

post image

ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் ஆகியிருக்கும் பெங்களூரு அணி அதில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

தொடர்ச்சியாக 18-வது ஆண்டாக பெங்களூரு அணியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்த சீசனில் 10 போட்டிகளில் 6 அரைசதங்கள் உள்பட 443 ரன்கள் குவித்து, அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.

விராட் கோலி
விராட் கோலி

பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பும் பெங்களூரு அணிக்கு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், ஆர்.சி.பி-யில் தனது ஆரம்ப காலத்தில் தனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் குறித்து விராட் கோலி பகிர்ந்திருக்கிறார்.

ஆர்.சி.பி-யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், விராட் கோலி பங்கேற்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் டிரெய்லர் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது.

அந்த டிரெய்லரில் தன்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் குறித்து பேசிய விராட் கோலி, "ஆரம்பத்தில் நான் விளையாடிய அனைத்து வீரர்களிலும், மார்க் பவுச்சர் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

எனது பலவீனங்கள் என்னவாக இருக்கும் என்பதை அவர் கண்டுபிடித்தார். அடுத்த கட்டத்திற்கு நான் முன்னேற வேண்டும் என்றால், அவரிடம் எதுவும் கேட்காமல் நான் இதைச் செய்ய வேண்டும்.

விராட் கோலி
விராட் கோலி

அவர் என்னிடம் ஒருமுறை, "3 - 4 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு நான் வர்ணனையாளராக வரும்போது, ​​நீங்கள் (கோலி) இந்தியாவுக்காக விளையாடுவதை நான் பார்க்கவில்லை என்றால், உங்களுக்கு நீங்களே தீங்கு விளைவிப்பீர்கள்" என்று சொன்னார். என்னுடன் நடத்திய உரையாடல்களால் என்னை அவர் மிகவும் திகைக்க வைத்தார்." என்று கூறினார்.

உலக கிரிக்கெட்டின் லெஜண்ட் விக்கெட் கீப்பரான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மார்க் பவுச்சர், சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 467 போட்டிகளில் 952 கேட்சுகளும், 46 ஸ்டம்பிங்க்ஸும் செய்திருக்கிறார். பேட்டிங்கில் 10,000-க்கும் மேற்பட்ட சர்வதேச ரன்கள் அடித்திருக்கிறார். ஆர்.சி.பி அணிக்காக 27 போட்டிகளில் 388 ரன்கள் அடித்திருக்கிறார்.

சஞ்சுவுக்கு ஆதரவுக் குரல் கொடுத்த ஸ்ரீசாந்த்; 3 ஆண்டுகள் தடை விதித்த KCA; பின்னணி என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், கேரளா உள்ளூர் கிரிக்கெட் அணியான ஏரீஸ் கொல்லம் சைலர்ஸ் (Aries Kollam Sailors) அணியின் இணை உரிமையாளருமான ஸ்ரீசாந்த் இனி கேரளா கிரிக்கெட் சங்கம் ... மேலும் பார்க்க

IPL 2025: "உங்கள் அணி கோப்பை வெல்லாதபோது, நீங்கள் 800 ரன்கள் அடித்தாலும் பயன் இல்லை" - ரோஹித் சர்மா

ஐபிஎல்லில் மும்பை அணிக்காக விளையாடும் ரோஹித் சர்மா, இந்திய அணியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி வருகிறார். சமீபத்திய பேட்டியில், பெரிய தொடர்கள் குறித்த அவரது அணுகுமுறை குறித்து பேசியுள்ள... மேலும் பார்க்க

Virat Kohli: `நீ சிங்கம் தான்...' - பகிர்ந்த கோலி; நெகிழ்ந்த STR; வைரலான பதிவு

நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது விருப்பமான பாடல் குறித்து பேசிய வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. IPL2025 சீசனில் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ரா... மேலும் பார்க்க

CSK vs PBKS: 'CSK செய்த 3 தவறுகள்!' - என்னென்ன தெரியுமா?

'சென்னை vs பஞ்சாப்!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக சென்னை அணிக்கு ப்ளே ஆப்ஸ் செல்ல 1% வாய்ப்ப... மேலும் பார்க்க

Dhoni : 'நான் அடுத்தப் போட்டிக்கே வருவேனா எனத் தெரியாது!' - ஓய்வு பெறுகிறாரா தோனி?

'சென்னை vs பஞ்சாப்!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸை பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் வென்றிருந்தார்.... மேலும் பார்க்க