செய்திகள் :

`நிம்மதியான தூக்கம் வேண்டுமா?’ பெட் ரூம் லைட் முதல் கட்டில் வரை... செக்லிஸ்ட்!

post image

நவீன உலகத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். காலையில் 9 மணிக்கு வேலைக்கு கிளம்பினால் இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு செல்வோம். தூங்கும் நேரம் மட்டும் தானே வீட்டில் இருப்போம். ஆனால் அந்த தூங்கும் நேரம் என்பது அவசியம் நிம்மதி நிறைந்த மணித்துளிகளாக இருக்க வேண்டும். உங்கள் மனநிலையை கூலாக வைத்திருக்க உதவ வேண்டும். அதற்கு நீங்கள் உங்கள் பெட் ரூம் வடிவமைப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். உங்களின் பெட் ரூம்மிற்கான டிப்ஸ்களை வழங்குகிறார் இன்டீரியர் டிசைனர் யாஷ். 

‘‘பெட்ரூமைப் பொறுத்தவரை மாஸ்டர் பெட்ரூம், கிட்ஸ் பெட்ரூம், கெஸ்ட் பெட்ரூம் என மூன்று வகைகளைச் சொல்லலாம். பெரும்பாலான வீடுகளில் மாஸ்டர் பெட்ரூம் மற்றும் கிட்ஸ் பெட்ரூம் வடிவமைக்கப்படுகிறது.

நிம்மதியான தூக்கத்திற்உ பேஸ்ட்டல் நிற வால் பேப்பர்களை வாங்கி பயன்படுத்துங்கள்.
நிம்மதியான தூக்கத்திற்உ பேஸ்ட்டல் நிற வால் பேப்பர்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு:

நீங்கள் ஏற்கனேவே கட்டிய வீட்டில் வாடகைக்கோ, லீஸிற்கோ இருக்கிறீர்கள் என்றால் வீட்டின் கட்டமைப்பில் வித்தியாசம் காட்ட முடியாது. ஆனால், சின்னச்சின்ன இன்டீரியரில் வித்தியாசம் காட்டலாம்.

உங்களின் படுக்கறைக்கு தகுந்த கட்டிலை தேர்வு செய்யுங்கள். ஏற்கனவே பெயிண்ட் செய்த வீடு எனில் பேஸ்ட்டல் நிற வால் பேப்பர்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

ஸ்கீரின் மற்றும் பெட் ஷீட் நிறம் வெளிர் நிறமாக இருப்பது நல்லது. கட்டிலை அறையின் நடுவில் போட்டு அறை பெரியதாக தெரியும்.

புதிதாக ஏதேனும் அலங்கார விளக்குகள் ஃபிக்ஸ் செய்ய இடம் இருந்தால் லைட்கள் வாங்கி பொருத்தலாம். அல்லது ஸ்டாண்டுடன் இருக்கும் விளக்குகளை தேர்வு செய்யுங்கள்.

கட்டிலுக்கு கீழ் மீதியடிகள் பயன்படுத்தலாம். கட்டில் போட இடம் இல்லை என்பவர்கள், மெத்தையை அறையில் ஒரு பகுதியில் விரித்து பயன்படுத்தலாம்.

சொந்த வீட்டுக்காரர்களுக்கு:

பெட்ரூமைத் திட்டமிடும்போது ஃபால்ஸ் சீலிங்குடனும், அகலமான கதவுகளுடனும் திட்டமிட்டால் அழகாக இருக்கும். ஃபால்ஸ் சீலிங் வைக்க விரும்புகிறீர்கள் எனில் கட்டடத்தின் உயரம் குறைந்தது 12 அடி இருப்பது நல்லது.பெட்ரூமைப் பொறுத்தவரை குறைந்தது 12 அடி நீள அகலத்தில் இருப்பது நல்லது. அதிகபட்சமாக 16 அடி நீள அகலம் வரை திட்டமிடலாம்.

உங்கள் பெட்ரூமைத் திட்டமிடும் போதே, பெட் மட்டும் போட்டுக்கொள்ளும் வகையில் திட்டமிடப் போகிறீர்களா அல்லது அலமாரி வசதிகளுடன் கூடிய அறையாகத் திட்டமிட்ட போகிறீர்களா? இரவு நேரத்தில் படிப்பதற்கோ அல்லது கணினியில் வேலை செய்வதற்கோ பயன்படுத்துவீர்களா? அந்த அறையின் பிரதானம் என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும்.

பெட்ரூமைப் பொறுத்தவரை குறைந்தது 12 அடி நீள அகலத்தில் இருப்பது நல்லது.
பெட்ரூமைப் பொறுத்தவரை குறைந்தது 12 அடி நீள அகலத்தில் இருப்பது நல்லது.

பால்கனி

பெட்ரூமூடன் ஒரு பால்கனி இருப்பது போல் திட்டமிடுவது நல்லது. இதனால் சூரிய ஒளி, காற்றோட்டம் போன்றவை இயற்கையாகவே கிடைக்கும்.

கட்டிலைப் பொறுத்தவரை சிங்கிள், கிங் சைஸ், குயின் சைஸ்  என வெவ்வேறு அளவுகளில் உள்ளது. கிங் சைஸ் பெட் என்பது 6.5  X 6 அடி நீள அகலத்திலும், குயின் சைஸ் பெட் 6.5 X 5 என்ற நீள அகலத்திலும் இருக்கும். குழந்தைகள் அதிகம் உள்ள வீடு எனில் லேயர்களாக இருக்கக்கூடிய பங்கர் வகை கட்டில்களைத் தேர்வு செய்யுங்கள்.

உயரமான ஹெட் போர்டு மற்றும் அத்துடன் இணைக்கப்பட்ட குஷன் கொண்ட கட்டிலைத் தேர்வு செய்தால் படுக்கையறை பிரமாண்ட தோற்றத்தில் இருக்கும். வலது, இடது என இரண்டு பக்கமும் சுவருடன் ஒட்டாமல் இடைவெளியுடன் கட்டில் இருக்குமாறு திட்டமிடுவது நல்லது.

கட்டில்களின் அடிப்பகுதியில் தலையணை, போர்வைகள் வைப்பதற்கான லேயர்கள் இப்போது வருகின்றன. புதிதாக கட்டில் வாங்குபவர்கள் இதுபோன்ற லேயர்கள் கொண்ட கட்டில்களை வாங்கினால் இடத்தை அடைக்காமல் நம் அறையை அழகுபடுத்தலாம்.


குழந்தைகளின் பெட்ரூம்களில் குழந்தை களை கவரும் வகையில் சுவரின் நிறத்தைத் தேர்வு செய்வதுடன், அவர்களின் பொம்மை கள் உள்ளிட்ட பொருள்களை வைப்பதற்கான இடத்துடன் திட்டமிடுவது நல்லது.

விருந்தினர் படுக்கையறை எனில் ஒரு சிறிய சிங்கிள் பெட் மற்றும் சிறிய அலமாரி வைத்து திட்டமிடலாம்.பெட்ரூமில் வெளிச்சம் குறைவான மின் விளக்குகளைப் பயன்படுத்தினால் நிம்மதியான தூக்கம் உறுதி. பளிச்சென்ற டியூப் லைட்களைத் தவிர்க்கலாம்.

பெட்ரூமில் வெளிச்சம் குறைவான மின் விளக்குகளைப் பயன்படுத்தினால் நிம்மதியான தூக்கம் உறுதி.
பெட்ரூமில் வெளிச்சம் குறைவான மின் விளக்குகளைப் பயன்படுத்தினால் நிம்மதியான தூக்கம் உறுதி.

பெட்ரூமில் நிறைய ஃபர்னிச்சர்கள் இல்லாமல் இருப்பது நல்லது. ஒரே ஒரு சிறிய டேபிள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

படுக்கை அறைக்கு வெள்ளை, சாம்பல் நிறம் போன்ற வகையில் பெயின்ட் நிறத்தைத் தேர்வு செய்வது நல்லது. ஸ்கிரீன்களைப் பொறுத்தவரை அடர் நிறங்களைத் தேர்வு செய்வதுடன் கதவு அல்லது ஜன்னல்களின் முழு உயரத்துக்கும் இருப்பது போன்று வாங்குவது நல்லது.

அலமாரி என்று எடுத்துக்கொண்டால் பொருள்களைச் சேமிக்கும் தன்மையைப் பொறுத்து நிறைய வகைகள் இருக்கின்றன. உங்கள் பயன்பாட்டுக்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அலமாரியின் உள்ளே கதவைத் திறக்கும்போது மட்டும் வெளிச்சம் தரக்கூடிய சென்சார் லைட்களை ஃபிக்ஸ் செய்துவிட்டால் பயன்பாட்டுக்கு இன்னும் எளிமையாக இருக்கும்.

வீடு கட்டுறீங்களா... பெட் ரூம் எப்படி இருக்க வேண்டும்?
வீடு கட்டுறீங்களா...பெட் ரூம் எப்படி இருக்க வேண்டும்?

அலமாரியுடன் கண்ணாடியையும் இணைத்து டிரெஸ்ஸிங் டேபிளை வடிவமைத்து விட்டால் இடம் மிச்சமாகும்.
லேமினேட் ஃபினிஷ், கிளாஸ் ஃபினிஷ், மிரர் ஃபினிஷ், அக்ரலிக் ஃபினிஷ் என நிறைய அலமாரி வகைகள் உள்ளன. உங்களின் பட்ஜெட் மற்றும் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்யலாம். அதே போல் ஹிங்க்ட் டோர் (Hinged door), ஸ்லைடிங் டோர்(Sliding door), வாக் இன் (walk in wardrobe ) ஃப்ரீ ஸ்டாண்டிங் (Free standing wardrobe) என நிறைய அலமாரி வகைகள் இருக்கின்றன. உங்கள் பயன்பாட்டைப் பொறுத்துத் திட்டமிடுங்கள்.

படுக்கையறைக்குத் தேவையான இன்டீரியர் டிசைனிங் செய்ய ‘IS 303 grade MR’ ஃப்ளைவுட் வகை பொருத்தமாக இருக்கும்.

படுக்கை அறையில் சின்ன சின்ன இண்டோர் செடி வகைகளை வாங்கி வைக்கலாம். இது நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்ததும் உங்களுக்கு ஃப்ரெஷ் லுக் தரும்

படுக்கை அறையில் சுவரில் வித்தியாசமான ரொமான்டிக் ஃபீல் தரக்கூடிய வால் ஸ்டிக்கர்கள் அல்லது பிரின்ட் வகைகளைப் பயன்படுத்தலாம்.

படுக்கையறையில் அதிக வெளிச்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். யெல்லோ லைட் பயன்பாடு பெட் ரூமிற்கு பெஸ்ட் சாய்ஸ்.”

``காத்தவராயன் கதைப்பாட்டை மூன்றாம் தலைமுறைக்கு கடத்தியவர்'' - மறைந்த கிராமியக் கலைஞர் வெங்கடேசன்!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கிழப்பாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். 93 வயதான இவர் கிராமிய கலைகளில் ஒன்றான காத்தவராயன் கதைப்பாட்டு சொல்வதில் சிறந்து விளங்கியவர். கோயில் திருவிழாக்க... மேலும் பார்க்க

தேசிய கொடியேந்தி வந்த உரிமையாளர், தடுப்பை உடைத்த மாடு - கோவையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின்‌ மீதிருந்த தடையை நீக்கச் சொல்லி 2017‌ நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து அந்த தடை நீக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் அதனைத் தொடர்ந்த வருடங்களில் ஐல்லிக்கட... மேலும் பார்க்க

ஜெயலலிதா, பானுமதி, சாவித்ரியை ஃபாலோ செய்யும் நயன்தாரா, வாணி போஜன் - ரிப்பீட் மோடில் ஃபேஷன் டிரெண்ட்!

அது ஒரு கேஷுவல் ஷாப்பிங் நாள். ஒரு பிரபல மால்ல இருக்க பிராண்டட் டிரஸ் கடைக்கு விசிட் அடிச்சேன். அங்கே ஒரு வெள்ளை கலர் டீ சர்ட்டும், ஆலிவ் கிரீன் கலர் பேகி பேண்டும் என்னை 'வா... வா...'னு கூப்பிட, அதை ட... மேலும் பார்க்க

வீடு: முதுகு, கை, கால் வலி வராமல் இருக்க... உங்கள் வீட்டு கிச்சனில் இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

ஒரு வீட்டில் கிச்சன் என்பது முக்கியமான அங்கம். அதன் வடிவமைப்பு சரியாக இருந்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம். கிச்சன் வடிவமைப்பிற்கு சில விதி முறைகள் உள்ளன அவற்றை தெளிவாக விளக்குகிறார் சென்னையைச் சேர்... மேலும் பார்க்க

Vikatan Play contest : அட எப்படி சிங்கிள் லைனில் எழுதி கலக்கியிருக்கிறார்கள்? | ஒன்று: காதல் கதைகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோடைகாலத்தில் அதிகம் பருகப்படும் இளநீர் - தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது தெரியுமா?

வெயில் காலம் வந்ததும் பலரின் பிரதான பானமாக இருப்பது இளநீர் தான். இளநீர் உடலின் சூட்டை தணிக்கும் என்று பலரும் கோடைகாலத்தில் இதனை பருகுவார்கள். மற்ற பழங்களில் இருந்து அதனை பிழியும் போது சாறு வருகிறது, அ... மேலும் பார்க்க