செய்திகள் :

வீடு: முதுகு, கை, கால் வலி வராமல் இருக்க... உங்கள் வீட்டு கிச்சனில் இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

post image

ஒரு வீட்டில் கிச்சன் என்பது முக்கியமான அங்கம். அதன் வடிவமைப்பு சரியாக இருந்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம். கிச்சன் வடிவமைப்பிற்கு சில விதி முறைகள் உள்ளன அவற்றை தெளிவாக விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த இன்டீரியர் டிசைனர் யாஷ்...

கிச்சன்... நோட் பண்ணுங்க!

கிச்சனைக் கட்டமைக்க பொதுவாக முக்கோண வித அமைப்பு ஒன்று உள்ளது. உங்களின் அடுப்பு வைக்கும் மேடை, பாத்திரம் கழுவும் இடம், ஃப்ரிட்ஜ் வைக்கும் இடம் என இவை மூன்றும் முக்கோண வடிவத்தில் இடம் பெறும். இதனை முக்கோண விதி என்போம். ஆனால், இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை.

இப்படி வடிவமைக்கும்போது பயன்படுத்த எளிதாக இருக்கும். ஒரு வீட்டின் மொத்த கட்டுமான அளவில் 20% முதல் 25% இடத்தையாவது கிச்சனுக்கு ஒதுக்குவது நல்லது.

கிச்சன் வடிவமைப்பு விதிகள்
கிச்சன் வடிவமைப்பு விதிகள்

கிச்சனில் சமையல் மேடை மற்றும் பாத்திரம் கழுவும் இடம் என இரண்டு பக்கம் மேடை அமைக்கப்பட்டால், அது ‘L’ வடிவ மேடை எனப்படும். மூன்று பக்கமும் மேடை அமைக்கப்பட்டால் அது ‘U’ வடிவ மேடை எனப்படும். சமைப்பதற்கும், மற்ற புழக்கத்துக்கும் என எதிரெதிரே இரு  மேடைகள் அமைக்கப்பட்டால் அது ‘பேரல்லல்’ (Parallel) மேடை எனப்படும்.

கிச்சனின் நடுப்பகுதியில் மேடை இருந்தால் அது ‘ஓப்பன் மாடுலர் கிச்சன்’ எனப்படும். ஒரே ஒரு மேடை மட்டும் இருந்தால் அது ‘ஸ்ட்ரைட் மாடுலர் கிச்சன்’ எனப்படும். உங்களின் வசதியை அடிப்படையாகக் கொண்டு முதலில் கிச்சன் மேடையின் வகையைத் தேர்வு செய்துவிடுங்கள்.

கிச்சன் மிகவும் சிறிய இடமாக இருக்கிறது எனில், ‘L’ வடிவ சமையலறை அல்லது ‘ஸ்ட்ரைட்’ சமையலறை வகையைத் தேர்வு செய்யலாம். 10 அடிக்கு மேல் அகலம் கொண்ட கிச்சன் எனில், ‘U’ வடிவ கிச்சனைத் தேர்வு  செய்யலாம். 10 அடிக்கு மேல் நீள, அகலம் இருக்கிறது எனில், ‘ஓப்பன் மாடுலர் கிச்சன்’ பொருத்தமாக இருக்கும்.
கிச்சனைப் பொறுத்தவரை, ஒரே நிறத் திலான பெயின்ட் மற்றும் வெளிர் நிறத்திலான டைல்ஸ்களைத் தேர்வு செய்வது நல்லது.

மாடுலர் கிச்சன்
மாடுலர் கிச்சன்

அதிக காற்றோட்டம் இல்லாத சமையலறை எனில், சிம்னி வைப்பது நல்லது. அந்த சிம்னி, அடுப்பிலிருந்து மூன்று அடி உயரத்துக்குமேல் இருப்பதுபோல் வைக்கவேண்டும். அதே போல, சிம்னியின் வலதுபுறமும், இடது புறமும் மூன்று இன்ச் இடைவெளி இருப்பது போல அமைப்பது நல்லது. நீங்கள் சிம்னி வைக்காமல், எக்ஸ்ஜாஸ்ட் ஃபேனைத் தேர்வு செய்கிறீர்கள் எனில், தரையிலிருந்து குறைந்தது ஐந்தடி உயரத்துக்கு மேல் பொருத்துவது நல்லது.


கிச்சனில் வெளிச்சம் வருவது மிக முக்கியம். கிச்சனில் மாட்டப்படும் விளக்குகளைப்  பொறுத்தவரை, சீலிங் லைட், ஹேங்கிங் லைட், ஸ்டோரேஜ் லைட், கேபினேட் லைட், ஸ்டிரிப் லைட், ஸ்பாட் லைட் என நிறைய வகை இருக்கிறது. அடுப்புக்கு மேற்புறம் வெளிச்சம் இருப்பதுபோல, விளக்குகளை மாட்ட வேண்டும். சுவரில் ஃபிக்ஸ் செய்யும் விளக்குகளைவிட தொங்கும் விளக்குகள்  கிச்சனுக்கு நல்லது.

கிச்சனில் வெளிச்சத்திற்கான வழிமுறைகள்
கிச்சனில் வெளிச்சத்திற்கான வழிமுறைகள்

இன்டீரியர் செய்யத் தொடங்கும்போதே உங்களின் ஃப்ரிட்ஜ் அளவு என்ன, மிக்ஸியின் அளவு என்ன, எந்தப் பொருள் எந்த இடத்தில் வைக்கலாம் எனப் பேசி முடிவு எடுத்து இன்டீரியர் செய்யத் தொடங்குவது அவசியம். மாடுலர் கிச்சன் எனில் ஸ்பூன்கள், கரண்டிகள் வைக்கக்கூடிய கட்லரி ட்ரே, கிண்ணங்கள் அடுக்கும் வகையிலான ஃப்ளை ட்ரே, தட்டுகள் அடுக்கும் வகையில் ப்ளேட் ட்ரே, ஆயில் ட்ரே போன்றவை அவசியம் இருக்க வேண்டும்.

மளிகைப் பொருள்கள், ஸ்டோரேஜ்கள் அடுக்க கூடுதலாக கேபினேட்டுகள் வைத்து விடுவது நல்லது. கேஸ் சிலிண்டர்கள் வைக்கப்  போதுமான உயரம் இருக்கும் அளவுக்கு கேபினேட்டுகளைத் திட்டமிடுவது நல்லது.

கிச்சனில் பாத்திரம் கழுவும் இடம் திட்டமிடுவது முக்கியமான ஒன்று. உங்களின் சிங்க் அடுப்பிலிருந்து மூன்று அடி இடைவெளியில் இருப்பது நல்லது. அடுப்பு மேடைக்கு இடது புறம் சிங்க் இருப்பது வேலையை எளிதாக்கும். எனினும், அது அவரவரின் விருப்பம் சார்ந்தது.


சின்க்-ன் உயரம் மூன்றரை அடி உயரமாவது இருக்க வேண்டும். இல்லை எனில், குனிந்து பாத்திரம் கழுவும் சூழல் வரும். இதனால் முதுகு வலி, கைவலி போன்றவை ஏற்படலாம். மிகச் சிறிய சிங்க் எனில், பாத்திரங்கள் தேய்க்க சிரமமாக இருக்கும். அதனால் கொஞ்சம் அகலமாக சின்க் அமைப்பது  நல்லது.

பாத்திரம் கழுவும் இடம்
பாத்திரம் கழுவும் இடம்

சின்க்-கைப் பொறுத்தவரை, சில்வர், கிரா னைட், கடப்பா கல் என நிறைய மெட்டீரியலில் வருகிறது. பாத்திரங்களைப் சுத்தப்படுத்த சில்வர் எளிதாக இருக்கும் என்பதால், சின்க்கானது சில்வரில் இருப்பது நல்லது. சின்ன சமையலறைக்கு பிளான் செய்பவர்கள் சமையலறையில் வாஷ்பேசினைத் தவிர்க்கலாம்.

பெரிய கிச்சன் எனில், கிச்சனிலிருந்து வெளியேறும் கதவுக்கு அருகில் வைப்பது சிறந்தது. வாஷ்பேசின் அல்லது சிங்கிற்கு மேல்புறம் வாட்டர் ப்யூரி பயர் இருப்பது போலத் திட்டமிடுங்கள். அதிலிருந்து வெளி யேறும் தண்ணீரை எளிமையாக வெளியேற்ற லாம். அவசரக் காலத்துக்கு அந்தத் தண்ணீரைச் சேமித்து பாத்திரங்கள் சுத்தப்படுத்தவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கிச்சனின் வழியே ஆரோக்கியத்தையும், நிம்மதியையும் வரவேற்போம்.”

Vikatan Play contest : அட எப்படி சிங்கிள் லைனில் எழுதி கலக்கியிருக்கிறார்கள்? | ஒன்று: காதல் கதைகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோடைகாலத்தில் அதிகம் பருகப்படும் இளநீர் - தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது தெரியுமா?

வெயில் காலம் வந்ததும் பலரின் பிரதான பானமாக இருப்பது இளநீர் தான். இளநீர் உடலின் சூட்டை தணிக்கும் என்று பலரும் கோடைகாலத்தில் இதனை பருகுவார்கள். மற்ற பழங்களில் இருந்து அதனை பிழியும் போது சாறு வருகிறது, அ... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

தங்களை விடாமல் துரத்தும் வீட்டு வேலைகள் குறித்து, ‘நானெல்லாம் செத்தாலும், எங்க வீட்டுல சமைச்சு வெச்சுட்டுத்தான் போய் சுடுகாட்டுல படுத்துக்கணும்’ என்று வேடிக்கையாக பெண்களில் சிலர் சொல்வதுண்டு. அவை, வேத... மேலும் பார்க்க

சென்னையில் ஒரு நாள்! - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Nudist: "இந்த கடற்கரைகளுக்கு ஆடை அணிந்துவரத் தடை" - ஜெர்மனி போட்ட புதிய விதி என்ன தெரியுமா?

ஜெர்மனியில் இயற்கை வாழ்வியலை ஆதரிக்கும் மக்கள் பயன்படுத்தும் நிர்வாண கடற்கரைகளில் உடையணிந்து செல்பவர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடற்கரை நகரமான ரோஸ்டாக்கில் அமல்படுத்தப்... மேலும் பார்க்க