பத்ரிநாத் கோயில் இன்று அதிகாலை திறப்பு! ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி வரவேற்பு
பஜ்ரங்தள் தொண்டா் கொலை வழக்கில் 8 பேர் கைது: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
பஜ்ரங்தள் தொண்டா் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்துள்ளார்.
மங்களூரில் வியாழக்கிழமை இரவு 8.30 மணி அளவில் சாலையில் பயங்கர ஆயுதங்களால் பஜ்ரங்தள் தொண்டரும், ரௌடி ஷீட்டருமான சுஹாஸ் ஷெட்டி மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் தென்கன்னட மாவட்டம் மட்டுமல்லாது, கடலோர கா்நாடகப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பஜ்பே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, மங்களூருக்கு வந்த கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) ஆா்.ஹிதேந்திரா சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தியதோடு, காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, மங்களூரில் மே 6-ஆம் தேதி வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இச்சம்பவத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தென்கன்னட மாவட்ட முழு அடைப்புப் போராட்டத்துக்கு விஸ்வஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்திப்பு
மேலும் வகுப்பு வெறுப்பு சம்பவங்களைச் சமாளிக்க நிரந்தரமாக ஒரு வகுப்புவாத எதிர்ப்புப் பணிக்குழு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நகர காவல் ஆணையர் அனுபம் அகர்வால், சுஹாஸ் ஷெட்டி கொலை தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆறு பேர் கொலையில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். சஃப்வான் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.