விஜய் சேதுபதி - நித்யா மெனன் படத்தின் பெயர் டீசர்!
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன், யோகி பாபு நடிப்பில் புதிய படம் உருவாகியுள்ளது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இணையும் முதல் படமென்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், காதல் கதையாக உருவான இப்படத்திற்கு ‘தலைவன் தலைவி’ எனப் பெயரிட்டுள்ளதாக டீசர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.