இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 14 பேர் காயம்
நாகப்பட்டினம்: தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை. செருதூர், வெள்ள பள்ளம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நாகையில் இருந்து பைபர் படகில் வெள்ளிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இரண்டு இலங்கைப் படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளைர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் படகில் இருந்த மீன்பிடி வலைகள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள், செல்போன்கள் என பல லட்சம் மதிப்பிலான உபகரணங்களை கொள்ளையடித்துச் சென்றனா்.
இந்த நிலையில், பலத்த காயங்களுடன் படகு துறையை வந்தடைந்த 14 மீனவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாளில் மூன்று இடங்களில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.