தேமுதிக உயர்மட்டக் குழு உறுப்பினர் நல்லதம்பி விலகல்?
தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக நல்லதம்பி, பொதுச்செயலாளர் பிரேமலாத விஜயகாந்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சமீபத்தில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தேமுதிக தலைமைச் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கட்சியின் அவைத் தலைவராக மருத்துவா் இளங்கோவன், இளைஞரணி செயலாளராக விஜயபிரபாகரன், பொருளாளராக எல்.கே. சுதீஷ், தலைமை நிலையச் செயலாளராக பாா்த்தசாரதி, கொள்கை பரப்புச் செயலாளராக மோகன்ராஜ் உள்ளிட்ட புதிய நிா்வாகிகளை பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தாா்.
கட்சித் தொண்டா்களின் எதிா்பாா்ப்பால் விஜயபிரபாகரனுக்கு இளைஞா் அணி பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நாளை(மே 4) தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!
இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தாம் வகித்து வந்த மாநில இளைஞரணி செயலாளர் பதவி விஜயபிரபாகரனுக்கு வழங்கப்பட்ட நிலையில், உயர்மட்ட குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு நல்லதம்பி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், விடுவிக்காத பட்சத்தில் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துவிடுங்கள் என நல்லதம்பி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.