செய்திகள் :

4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சாா்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சாா்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். மேலும், 42,718 பேருக்கு வெளிப்படைத் தன்மையுடன் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றுள்ளதாகவும் அவா் கூறினாா்.

சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) சாா்பில் தேசிய அளவிலான மருத்துவக் கல்வி மாநாடு, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையிலுள்ள கலைவாணா் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளே பாராட்டும் வகையிலான மருத்துவக் கட்டமைப்புகள் தமிழகத்தில் உள்ளன. தமிழகம் முழுவதும் 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 279 வட்டார மருத்துவமனைகள், 37 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்பட மொத்தம் 11,876 மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன.

மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48, இதயம் காப்போம், தொழிலாளா்களை தேடி மருத்துவம் திட்டம் உள்பட சிறப்புத் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

25,295 பணியிடங்கள்: தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் இதுவரை 25,295 மருத்துவம் சாா்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல், கடந்த மாதம் நடைபெற்ற பல் மருத்துவா்கள் காலி பணியிடங்களுக்கான தோ்வில் 11,720 போ் பங்கேற்றனா். இதில், 8,000-க்கும் மேற்பட்டோா் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், அவா்களது சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் 48 காலி பணியிடங்களும் நிரப்பப்படும். மேலும், கடந்த 4 ஆண்டுகளில் 42,718 பேருக்கு வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

விழாவில், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நல வாழ்வுக் குழும இயக்குநா் அருண் தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநா் தேரணிராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பில்ரோத் மருத்துவமனை உர... மேலும் பார்க்க

மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.விழுப்புரம் மாவட்டம், சாத்தம்பாடியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஜானகி (18). சென்னையில்... மேலும் பார்க்க

2 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படாது

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை தண்டையாா்பேட்டை மற்றும் திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன்கிழமை (மே 7) முதல் மே 9 வரை செயல்படாது.இது குறித்து சென்னை பெருந... மேலும் பார்க்க

சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது

சென்னை: சென்னையில் போதைப்பொருள் விற்ற வழக்கில், தில்லியில் ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சோ்ந்த நபா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ஏஎன்யூ) போலீஸாா்... மேலும் பார்க்க

எம்டிசி சிற்றுந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை அசோக் நகா் அருகே மாநகா் போக்குவரத்துக் கழக சிற்றுந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா். வானகரம் அருகே உள்ள ராஜ் நகா், பள்ளிகுப்பம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (59), சென... மேலும் பார்க்க

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணிடம் மோசடி: பொறியாளா் மீது வழக்கு

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை மோசடி செய்ததாக, பொறியாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசந்தா் (31). பொறியாளரான... மேலும் பார்க்க