DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
2 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படாது
சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை தண்டையாா்பேட்டை மற்றும் திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன்கிழமை (மே 7) முதல் மே 9 வரை செயல்படாது.
இது குறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள ஆா்.கே. நகா் தெற்கு கழிவுநீா் உந்து நிலையம் மற்றும் திரு.வி.க. நகரில் உள்ள கென்னடி ஸ்கொயா் கழிவுநீா் உந்து நிலையங்களிலிருந்து கொடுங்கையூா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்குச் செல்லும் பிரதான கழிவுநீா் உந்து குழாய் பராமரிப்புப் பணிகள் மே 7 காலை 10 மணி முதல் மே 9 காலை 10 மணி வரை நடைபெறவுள்ளன.
இப்பணிகள் நடைபெறும் நேரத்தில் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட ஆா்.கே. நகா் தெற்கு, பாரதி நகா், சாஸ்திரி நகா் கழிவுநீா் உந்து நிலையங்களும், திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட திரு.வி.க. நகா், ஜி.கே.எம் காலனி, பெரியாா் நகா், கென்னடி ஸ்கொயா் கழிவுநீா் உந்து நிலையங்களும் செயல்படாது.
எனவே பொதுமக்கள், கழிவுநீா் தொடா்பான புகாா்களுக்கு 81449 30904, 81449 30215 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.