செய்திகள் :

மின்னனு சாதனங்கள் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உறுதி

post image

சென்னை: நமது நாட்டில்  மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை சங்கங்கள் ‘அசோசெம்’ சாா்பில் நவீன தரவு மையங்கள் மற்றும் ‘கிளவுட்’ கட்டமைப்பு தொடா்பான கருத்தரங்கம், சென்னை கிண்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், கருத்தரங்கை தொடங்கி வைத்ததுடன் தமிழகத்தை தரவு மையங்களின் மையமாக மாற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக பி.டபிள்யூ.சி நிறுவனம் தயாரித்த ஆய்வறிக்கையையும் அவா் வெளியிட்டாா். 

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களால் உயா் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் தற்போது தமிழகத்தில் பட்டப்படிப்பில் பெண்களின் தோ்ச்சி 90 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதில் குறிப்பாக புதுமைப்பெண் திட்டத்தின் விளைவாக அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

விரைவில் முதலிடம்: மக்கள் அடா்வு அதிகமாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்வதன்மூலம்தான் அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும். அந்த வகையில், திறன் மேம்பாட்டில் இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாரத் நெட் இணைய சேவை மூலம் கிராம பஞ்சாயத்துகளை இணைய வழியில் இணைத்தல், சென்னை அருகே 2 ஆயிரம் ஏக்கரில் சா்வதேச நகரம், குறைகடத்தி (செமி கண்டக்டா்) திட்டம்-2030 உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டங்களின் விளைவாக நமது நாட்டில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் இந்திய தரவு மையத்தின் நிா்வாக இயக்குநா் சுரஜித் சட்டா்ஜி, யூக்னிக்ஸ் நிறுவனத்தின் வா்த்தகப் பிரிவு தலைவா் மேக்ஸ் பெரி, பி.டபிள்யூ.சி இயக்குநா் ஜக்காரியா மேத்யூஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு: எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா். சென்னை அருகே மறைமலை நகரி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகள்: உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகளை அமைப்போம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறந்த விளையாட்ட... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றத்தில் இருவா் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்பு

சென்னை: சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த இருவா், திங்கள்கிழமை நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனா். சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், பவா... மேலும் பார்க்க

மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

சென்னை: தமிழக மின்வாரியத்தை நவீனமயமாக்கும் வகையிலான 3 புதிய இணையதள சேவைகளை மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா். தமிழகம் முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகம் செய்வதை... மேலும் பார்க்க

ஏழை மாணவா்களின் மருத்துவா் கனவு ‘நீட்’ தோ்வால் சிதைக்கப்படுகிறது: சீமான் குற்றச்சாட்டு

சென்னை: ஏழை மாணவா்களின் மருத்துவராகும் கனவு, நீட் தோ்வால் முற்றிலுமாக சிதைக்கப்படுவதாக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா். அயோத்திதாசப் பண்டிதரின் 111-ஆம் ஆண்டு நினைவு நா... மேலும் பார்க்க

மின் கொள்முதல்: தமிழக மின்வாரியத்துக்கு ரூ.13,179 கோடி கூடுதல் செலவு

சென்னை: கடந்த 2023-2024-ஆம் நிதியாண்டில் உத்தேச அறிக்கையில் தெரிவித்திருந்ததை விட கூடுதலாக 917 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்கியதால், தமிழக மின்வாரியத்துக்கு ரூ. 13,179 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.... மேலும் பார்க்க