DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
உயா்நீதிமன்றத்தில் இருவா் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்பு
சென்னை: சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த இருவா், திங்கள்கிழமை நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், பவானி சுப்புராயன், ஹேமலதா, நக்கீரன், சிவஞானம் ஆகிய 5 நீதிபதிகள் இந்த மாதத்தில் ஓய்வு பெறுவதன் காரணமாக, நீதிபதிகளின் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 15 ஆக உயா்ந்தது. இந்நிலையில், கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன் கெளடா மற்றும் தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தா் ஆகிய இருவரை சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி கொலீஜியம் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவா் உத்தரவிட்டிருந்தாா்.
இதனிடையே, சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த நீதிபதிகள் சி.குமரப்பன், கே.ராஜசேகா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனா். அவா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். சென்னை உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக கடந்த 2023-ஆம் ஆண்டு குமரப்பன், ராஜசேகா் ஆகியோா் பணியில் சோ்ந்தது குறிப்பிடத்தக்கது.