செய்திகள் :

மின் கொள்முதல்: தமிழக மின்வாரியத்துக்கு ரூ.13,179 கோடி கூடுதல் செலவு

post image

சென்னை: கடந்த 2023-2024-ஆம் நிதியாண்டில் உத்தேச அறிக்கையில் தெரிவித்திருந்ததை விட கூடுதலாக 917 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்கியதால், தமிழக மின்வாரியத்துக்கு ரூ. 13,179 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடனால் திணறிவரும் மின்வாரியத்துக்கு இது பெரும் சுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2022-2023-ஆம் நிதியாண்டின் தினசரி மின்தேவை 16,000 மெகாவாட்டாக இருந்துவந்த நிலையில், உச்சபட்ச மின்தேவை 18,000 மெகாவாட்டாக உயா்ந்தது. இந்த மின்தேவை தமிழ்நாடு மின்வாரியத்துக்குச் சொந்தமான மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரம் வாயிலாக பூா்த்தி செய்ய முடியவில்லை என்பதால், மத்திய தொகுப்பு மற்றும் தனியாா் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தம் மூலமும், இதுதவிர மிகவும் நெருக்கடியான காலங்களில், மின்சார சந்தையில் இருந்தும் குறுகியகால மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்து விநியோகித்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2022-2023 முதல் 2026-2027 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு தனித்தனியே உத்தேச வருவாய், செலவு, தேவை போன்றவற்றை உள்ளடக்கிய அறிக்கையை மின்வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்து ஒப்புதல் கோரியது. இதன் மதிப்பு ரூ. 55,754 கோடி. இதை பரிசீலித்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இதற்கு ஒப்புதல் அளித்து அதற்கான அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் வெளியான தகவலின்படி, 2023-2024-இல், ரூ. 42,575 கோடிக்கு 7,373 கோடி யூனிட் வாங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தேவை அதிகரித்ததால் கூடுதலாக 917 கோடி யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் மின்வாரியத்துக்கு ரூ. 13,179 கோடி கூடுதல் செலவாகியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடனால் திணறிவரும் மின்வாரியத்துக்கு இது பெரும் சுமையாக இருக்கும் என்றும், அடுத்த நிதியாண்டுகளில் இந்த செலவு கூடுதலாக வாய்ப்புள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

உதகை தொட்டபெட்டா காட்சி முனை செல்வோர் கவனத்துக்கு....!

காட்டு யானையின் நடமாட்டம் உள்ளதால் உதகை தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல இன்று(மே 6) ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், உதகை வனப் பகுதியில் தற்போது வறட்சி நிலவும் நிலையில் விலங்குகள் உ... மேலும் பார்க்க

வைகோ மருத்துவமனையில் அனுமதி!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் எம்பியுமான வைகோ, வீட்டில் தவறிவிழுந்ததில் கை விரலில் காயம் ஏற்... மேலும் பார்க்க

மின்னனு சாதனங்கள் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உறுதி

சென்னை: நமது நாட்டில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா். இந்தி... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு: எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா். சென்னை அருகே மறைமலை நகரி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகள்: உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகளை அமைப்போம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறந்த விளையாட்ட... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றத்தில் இருவா் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்பு

சென்னை: சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த இருவா், திங்கள்கிழமை நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனா். சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், பவா... மேலும் பார்க்க