ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்
உதகை தொட்டபெட்டா காட்சி முனை செல்வோர் கவனத்துக்கு....!
காட்டு யானையின் நடமாட்டம் உள்ளதால் உதகை தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல இன்று(மே 6) ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை வனப் பகுதியில் தற்போது வறட்சி நிலவும் நிலையில் விலங்குகள் உணவுத் தேடி குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உலவுவது அதிகரித்து வருகிறது.
இதனிடையே, வனத்தில் இருந்து திங்கள்கிழமை வெளியேறிய காட்டு யானை தொட்டபெட்டா செல்லும் சாலையில் உலவியது.
இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர், யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு யானை வனத்துக்குள் விரட்டப்பட்டது. இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.
இந்நிலையில், காட்டு யானையின் நடமாட்டத்தையொட்டி தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல இன்று(மே 6) ஒருநாள் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!