செய்திகள் :

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார் பூங்குன்றன்!

post image

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கணியன் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று ஆஜராகியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன், அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள், சயான் உள்ளிட்ட பலரிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டது. அப்போது, பங்களாவில் இருந்ததாகக் கூறப்படும் கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் மதிப்புமிக்க பொருள்கள் குறித்து அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதுவரை இந்த வழக்கில் 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, முக்கிய குற்றவாளியான கனகராஜின் சர்வதேச தொலைபேசி அழைப்பு விவரங்களை இன்டர்போல் மூலம் பெறுவதற்கு சிபிசிஐடி முயற்சித்து வருகிறார்கள். கடந்த 2017 ஏப்ரல் 23ஆம் தேதி கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த பயங்கர கொள்ளை சம்பவத்தில் காவலாளி ஓம் பகதூர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, சிறப்புப் புலனாய்வுக்குழு இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்து வருகிறது. குற்றவாளிகளின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்வதற்காக இன்டர்போலின் உதவியை நாடியுள்ளனர். மேலும், இவ்வழக்கில் கூடுதல் சாட்சிகளையும் விசாரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த கணியன் பூங்குன்றன் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் பங்களாவில் கொள்ளை போன பொருள்கள் குறித்து விசாரணை நடைபெறலாம் என்றும் தெரிகிறது. ஜெயலலிதா இருந்தவரை எப்போதும் பரபரப்பாகக் காணப்பட்ட பூங்குன்றன், அவரது மறைவுக்குப் பிறகு அமைதியாக அரசியலிலிருந்தும் ஆட்சியாளர்களிடமிருந்தும் ஒதுங்கினார். தற்போது தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து விவசாயம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பூங்குன்றனின் இந்த ஆஜர், கொடநாடு வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மு.க. ஸ்டாலினின் ஆட்சிக்கு சவக்குழிக்குச் சென்ற சட்டம் - ஒழுங்கே சாட்சி! - இபிஎஸ் கடும் விமரிசனம்!

முதல்வர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமரிசித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தொடர் கொலைகள்- ஜாதிய மோ... மேலும் பார்க்க

ஊடகத்துறையினருடன் சந்திப்பு.. தயங்காமல் விமர்சியுங்கள், பாராட்டுங்கள் - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பாராட்ட வேண்டியதை பாராட்டினால் தான், விமர்சனத்திற்கான மரியாதையும் மதிப்பும் கிடைக்கும்! எனவே, தயங்காமல் விமர்சிப்பது போன்று, தயங்காமல் பாராட்டுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார... மேலும் பார்க்க

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை எப்படி அறியலாம்?

தமிழகத்தில் மே 8ஆம் தேதி பனிரெண்டாம் பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் மே 9ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் எ... மேலும் பார்க்க

அடகுக் கடையில் 250 சவரன் நகை, 8 கிலோ வெள்ளி திருட்டு!

அரியலூர்: அரியலூரில் அடகுக் கடையில் 250 சவரன் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த பணியாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.ராஜஸ்தா... மேலும் பார்க்க

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கத்திரி வெய்யில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கியது. வரும் 28-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய... மேலும் பார்க்க

ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடை... மேலும் பார்க்க