ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்! தலைநகரில் விமான சேவைகள் நிறுத்தம்!
Retro: "சூர்யாவின் சூப்பர் ஃபர்பாமென்ஸ்; கடைசி 40 நிமிடங்கள்..." - ரெட்ரோ குறித்து ரஜினிகாந்த்
நடிகர் சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள ரெட்ரோ படத்துக்கு பல தரப்புகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் ரெட்ரோ திரைப்படம் பார்த்து வாழ்த்தியது குறித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

ரஜிகாந்த்தின் பேட்ட திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜின் 9வது திரைப்படம் ரெட்ரோ. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியுள்ளன.
ரெட்ரோ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், "மொத்த குழுவும் எவ்வளவு மெனக்கெட்டுள்ளீர்கள்... சூர்யாவின் பர்ஃபாமென்ஸ் சூப்பர்... படத்தின் கடைசி 40 நிமிடங்கள் மிக அருமையாக இருந்தன. அந்த சிரிப்பு டச் சிறப்பாக இருந்தது. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்" என வாழ்த்தியுள்ளார்.
Thalaivar watched #Retro & he Loved it....
— karthik subbaraj (@karthiksubbaraj) May 6, 2025
Exact words of Thalaivar......
"What an effort by whole team.... Suriya performance Super.... Last 40 minutes of the film Superb... Laughter touch is Fantastic....God bless"
Am flying now.....Love you Thalaivaaa ❤️❤️… pic.twitter.com/D9pBy5DjhJ
ரஜினியின் வாழ்த்தைக் கேட்ட பிறகு தனது கால்கள் தரையிலேயே இல்லை எனக் கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். "நான் இப்போது பறப்பதுபோல உணர்கிறேன்... லவ் யூ தலைவா" என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.