செய்திகள் :

போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் என்ன நடக்கும்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

post image

நாடு முழுவதும் 250 இடங்களில் புதன்கிழமை போர்ப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவுள்ளன.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, எந்நேரமும் பாகிஸ்தான் மீது இந்தியா பதில் தாக்குதலைத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மேலும், இந்த ஒத்திகையை புதன்கிழமை (மே. 7) நடத்துமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்காக ஏற்பாடுகளை அந்தந்த பகுதிகளில் உள்ள விமானப் படை வீரர்கள், ராணுவ முகாம்களில் உள்ள வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படைகள், மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறை வீரர்கள், காவல்துறையினர் இணைந்து செய்து வருகின்றனர்.

54 ஆண்டுகளுக்குப் பிறகு..

இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு போர் நடந்தபோது, போர்ப் பாதுகாப்பு ஒத்திகையை பாதுகாப்புப் படை அதிகாரிகள் நடத்தினர்.

இந்த நிலையில், 54 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை போர்ப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவுள்ளன.

எங்கெல்லாம் போர்ப் பாதுகாப்பு ஒத்திகை?

பாகிஸ்தானையொட்டிய சா்வதேச எல்லையை இணைக்கும் இந்திய எல்லை மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், லடாக், ஜம்மு - காஷ்மீா் உள்ளிட்ட மாநிலங்களில் தாக்குதலுக்கு வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு போர்ப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை கல்பாக்கம் அணு மின் நிலையம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை, மணலி பெட்ரோலிய தொழிற்சாலைகளில் போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒத்திகையின்போது என்ன நடக்கும்?

  • வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே மக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிக்கச்செய்வார்கள்.

  • ஒத்திகை நடைபெறும் இடங்களில் சைரன் ஒலிகளுடன் போர் விமானங்கள் வானில் வட்டமிடும்.

  • இரவு நேரத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தும்போது, அப்பகுதிகளில் மின்சாரம், இணையதளம் ஆகியவை முழுமையாக முடக்கி மக்கள் வெளியேற்றப்படுவார்கள்.

  • தாக்குதலுக்குள்ளானால் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றத் திட்டம் 1,2,3 ஆகியவற்றை தயாரித்து பாதுகாப்புப் படையினர் செயல்படுத்துவார்கள்.

  • மருத்துவமனைகளின் தயார்நிலை சரிபார்க்கப்படும்.

  • அனைத்து விமானப் படை தளங்களிலும் நெடுஞ்சாலைகளில் உள்ள போர் விமான தளங்களிலும் விமானங்களை தரையிறக்கி சோதனை செய்வார்கள்.

  • எல்லையோரப் பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் மக்களைப் பதுங்கு குழிக்கு அழைத்துச் சென்று ஒத்திகை செய்யப்படும்.

  • இந்திய விமானப்படையுடன் ஹாட்லைன்/ரேடியோ தொடர்பு இணைப்புகளை செயல்படுத்தி கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து சோதனை செய்யப்படும்.

  • தாக்குதல் நடைபெற்றால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், இந்த பாதுகாப்பு ஒத்திகைக்கு முன்னதாகவே அப்பகுதி மக்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இணைய சேவை முடக்கப்பட்டால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் போலிச் செய்திகளைக் கண்டு பதற்றமடையாமல், மற்றவர்களுக்கு பரப்பாமல் அரசின் வழிகாட்டுதலின்படி செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.

பட்டாசுகளுக்குத் தடை விதிக்க உ.பி., ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களுக்கு உத்தரவு!

ஒரு மாதத்திற்குள் பட்டாசுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தில்லியில் காற்று மாசுபாடு தொடர்பான மனுவை வி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை! முக்கிய சேவைகள் பாதிக்கப்படுமா?

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருப்பதற்கான சோதனை மற்றும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய உள் விவகாரத் துறை அறிவுறுத... மேலும் பார்க்க

இந்திய எல்லையினுள் ஊருவிய பாகிஸ்தானியர் கைது!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சட்டவிரோதமாக இந்தியாவினுள் ஊருவிய பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தானின் கட்டுப்பா... மேலும் பார்க்க

போர்ப் பாதுகாப்பு ஒத்திகை: தொண்டர்களுக்கு பாஜக அழைப்பு!

நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் கலந்துகொள்ள கட்சியின் தலைவர்கள், தொண்டர்களுக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவ... மேலும் பார்க்க

காஷ்மீர் பயணத்தை மோடி ரத்து செய்தது ஏன்? கார்கே

காஷ்மீர் பயணத்தை மோடி ரத்து செய்தது ஏன்? என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். தாக்குதல் எச்சரிக்கை பற்றி முன்பே அறிந்ததால் பிரதமர் காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார். உளவுத்துறை ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை: மத்திய அரசு

புது தில்லி; நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் 7 நாள்களுக... மேலும் பார்க்க