உ.பி., கிராமத்தின் 78 வருடத் தவிப்பு; சோலார் விளக்கின் ஒளியில் கனவை நனவாக்கிய 10...
இந்திய எல்லையினுள் ஊருவிய பாகிஸ்தானியர் கைது!
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சட்டவிரோதமாக இந்தியாவினுள் ஊருவிய பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தானின் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு வழியாக சட்டவிரோதமாக ஊடுருவிய பாகிஸ்தான் இளைஞரை இன்று (மே.6) பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டு எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வருகின்றது.
இந்நிலையில், தற்போது எல்லையைக் கடந்து இந்தியாவின் சாகான் - டா- பாக் எனும் கிராமத்தில் கைது செய்யப்பட்ட அந்த இளைஞரிடம் பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தர்கால் எனும் கிராமத்தைச் சேர்ந்த வகாஸ் (வயது 26) என்பது தெரியவந்துள்ளது.
மேலும், அவரிடமிருந்து சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் எதிர்பாராத விதமாக இந்திய எல்லையினுள் நுழைந்துவிட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: போர்ப் பாதுகாப்பு ஒத்திகை: தொண்டர்களுக்கு பாஜக அழைப்பு!