செய்திகள் :

அய்யனார் துணை தொடரில் சிங்கப் பெண்ணே நடிகை!

post image

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரில் நடிகை திவ்யா விஜயகுமார் இணைந்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப் பெண்ணே தொடரில் யாழினி என்ற பாத்திரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் திவ்யா நடித்திருந்த நிலையில், மற்றொரு பிரபல தொடரில் தற்போது இணைந்துள்ளார்.

அய்யனார் துணை தொடரில் 4 நாயகர்களில் ஒருவரான பல்லவனுக்கு ஜோடியாக திவ்யா நடிக்கவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி முதல் அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் எதிர்நீச்சல் பிரபலம் மதுமிதா நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் பிரபலம் அரவிந்த் சேஜு நடிக்கிறார்.

அய்யனார் துணை

இத்தொடரில் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி பாத்திரத்தில் நடித்த ரோசரி, இத்தொடரில் இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.

நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி (மதுமிதா), கூட்டு குடும்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக உள்ளது. எஞ்சியுள்ள மூவருக்கும் திருமணக் காட்சிகள் விரைவில் இடம்பெறவுள்ளன.

திவ்யா விஜயகுமார்

இதில், பல்லவனுக்கு ஜோடியாக நடிகை திவ்யா நடிக்கவுள்ளார். சிங்கப் பெண்ணே தொடரில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டைப் பெற்ற நிலையில், அய்யனார் துணை தொடரிலும் பாத்திரத்துக்கு வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | 9 மாதங்களில் நிறைவடையும் பிரபல தொடர்!

15 ஆண்டுகள் சாபத்தை உடைத்து சாம்பியனான ஹாரி கேன்! விராட் கோலிக்கும் நடக்குமா?

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேன் 2010-இல் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் கால்பந்து கிளப்பில் சேர்ந்தார். அந்த அணியிலிருந்து லோன் மூலமாக பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். பெயர்ன் மியூனிக் அணியில் கடந்த 2023இல் இண... மேலும் பார்க்க

ரெட்ரோ வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரெட்ரோ திரைப்படத்தின் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் மே. 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விம... மேலும் பார்க்க

திருச்சி தாயுமான சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்!

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி மாட்டுவார்குழலம்மை அம்பாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தென் கைலாயம் எனப் போற்றப்படும் மலைக்கோட்டை தாயு... மேலும் பார்க்க

தென்னிந்தியப் படங்களை காப்பி அடிக்கிறது பாலிவுட்: நவாசுதீன் சித்திக்

நடிகர் நவாசுதீன் சித்திக் பாலிவுட் திரைத்துறை மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.பாலிவுட்டில் சாதாரண நடிகராக அறிமுகமாகிதனது நடிப்புத்திறமையால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நவாசுதீன் சித்தி... மேலும் பார்க்க

மோகன்லாலின் தொடரும் டிரைலர்!

மோகன்லாலின் துடரும் படத்தின் தமிழ் டிரைலரை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரைக்கு வந்தது... மேலும் பார்க்க

9 மாதங்களில் நிறைவடையும் பிரபல தொடர்!

புன்னகைப் பூவே தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.சன் தொலைக்காட்சியில் பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் புன்னகைப் பூவே. இத்தொடரில் பிரதான பாத்திரத்தில் ஹர்ஷ் நாக்பால், ஐஷ்வர்யா ... மேலும் பார்க்க