வில் ஜாக்ஸ் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 156 ரன்கள் இலக்கு!
கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட, ஒபுலாபுறத்தில் சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டப்பட்ட முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கலி ஜனார்த்தன் ரெட்டி மற்றும் அவருடன் சேர்த்து 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் மேற்கண்ட நால்வர் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் சிறைத்தண்டனை விதித்து இன்று(மே 6) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.