இரவு 10 மணிவரை 14 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இப்பகுதிகளில் 30 - 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதேபோன்று திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் சிவகாசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.