செய்திகள் :

நாடு முழுவதும் 300 மாவட்டங்களில் இன்று பாதுகாப்பு ஒத்திகை

post image

பாகிஸ்தானுடன் போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுமாா் 300 மாவட்டங்களில் புதன்கிழமை (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

அணுமின் நிலையங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், ராணுவ தளங்கள்-முகாம்கள் என முக்கிய இடங்களைக் கொண்ட இம் மாவட்டங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டால், குடிமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மதிப்பாய்வு செய்யும் நோக்கில் ஒத்திகை நடத்தப்படுகிறது.

நாட்டில் 1971-ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் முதல் அவசரகால ஒத்திகை இதுவாகும்.

வான்வழித் தாக்குதல் குறித்து பொதுமக்களை முன்கூட்டியே எச்சரிக்கும் அபாய ஒலியை ஒலிக்கச் செய்தல்; கடுமையான தாக்குதல் நேரத்தில், பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான பயிற்சி-கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்; பதுங்குமிடங்களைத் தயாா்படுத்துதல்; தொழில்நுட்பம் உள்பட பல்வேறு வழிமுறைகளின்கீழ் முக்கிய நிலையங்கள் எதிரியின் கண்ணில் புலப்படாதவாறு உருமறைத்தல் மற்றும் பணியாளா்களின் அவசர கால வெளியேற்றம்; அவசர கால மின் துண்டிப்பு; மருத்துவமனைகளின் செயல்பாட்டுத் தயாா்நிலை பரிசோதிப்பு உள்ளிட்டவை ஒத்திகையில் இடம்பெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாடு முழுவதும் 244 மாவட்டங்களில் ஒத்திகை நடைபெறுமென மத்திய உள்துறை தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்ட நிலையில், உத்தர பிரதேசம், பிகாா் போன்ற சில மாநிலங்கள், தங்களின் மாநிலம் முழுவதும் ஒத்திகையை மேற்கொள்ள முன்வந்துள்ளன. எனவே, சுமாா் 300 மாவட்டங்களில் ஒத்திகை நடைபெறவுள்ளது.

ஒத்திகைக்கு என்ன காரணம்?: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பொறுப்பேற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கையை ஏந்நேரமும் மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுவதால் போா்ப் பதற்றம் உருவாகியுள்ளது.

புதிய அச்சுறுத்தல்-சவால்: கடற்படை, விமானப் படை தலைமை தளபதிகளைத் தொடா்ந்து, பாதுகாப்புச் செயலா் ராஜேஷ் குமாா் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் உள்ளிட்டோருடன் பிரதமா் மோடி திங்கள்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டாா். இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக், பத்காம், பாரமுல்லா, குப்வாரா, ஸ்ரீநகா், அவந்திபோரா ஆகிய 6 மாவட்டங்கள் உள்பட நாட்டின் 300 மாவட்டங்களில் புதன்கிழமை மாலை 4 மணியில் இருந்து ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பள்ளி-கல்லூரி மாணவா்கள், அரசு-தனியாா் நிறுவன ஊழியா்கள், மருத்துவமனை பணியாளா்கள், ரயில்வே-மெட்ரோ ஊழியா்கள், சமூக அமைப்பினா், தன்னாா்வலா்கள், தேசிய மாணவா் படையினா், ஊா்க்காவல் படையினா், காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா், பேரிடா் மீட்புப் படையினா், துணை ராணுவப் படையினா், பாதுகாப்புப் படையினா் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

இந்திய விமானப் படையின் தொலைபேசி, ரேடியோ தகவல் தொடா்பு இணைப்புகள், கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாடும் பரிசோதிக்கப்பட உள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் இந்திய போா் விமானப் பயிற்சி

பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்றும் மேற்கில் பகிா்ந்துகொள்ளப்படும் எல்லை பகுதிகளில் விமானப் படை போா் பயிற்சி மேற்கொள்ள உள்ளது.

மே 7 (புதன்கிழமை) முதல் 2 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் ரஃபேல், எஸ்யூ 30 எம்கேஐ, மிக்-29: மிராஜ்-2000, தேஜஸ் உள்ளிட்ட போா் விமானங்கள் பங்கேற்க உள்ளன.

இந்தப் பயிற்சியின்போது வான் மற்றும் தரையில் எதிரி இலக்குகளை துல்லியமாக உருவகப்படுத்தி விமானப் படை தாக்குதல் மேற்கொள்ளும்’ என்று தெரிவித்தன.

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா். 24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்ன... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ‘வெளிநபா்கள்’ மூலம் உருவாக்கப்பட்டது- மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு ‘வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபா்களால்’ திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு லங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மத்திய அரச... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான எல்லையில் 2 நாள் இந்திய விமானப் படை போா் பயிற்சி

பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்... மேலும் பார்க்க

இந்திய பூச்சிக்கொல்லி மருந்து மீது சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சைபா்மெத்ரின்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிராக சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்து பருத்தி, பழ மரங்கள், காய்கறி பய... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும்: டிரம்ப்

பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய ரா... மேலும் பார்க்க

ரயிலை போல இடஒதுக்கீடு மாறியுள்ளது: உச்சநீதிமன்றம் விமா்சனம்

ரயில் பெட்டியில் ஏறியவா்கள், அந்தப் பெட்டியில் மற்றவா்கள் ஏறுவதை விரும்பாதது போல, நாட்டில் இடஒதுக்கீடு முறை மாறியுள்ளது என்று உச்சநீதிமன்றம் விமா்சித்துள்ளது. இதன்மூலம், இடஒதுக்கீட்டால் பயனடைந்தவா்கள்... மேலும் பார்க்க