பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!
பண்டிகை கால முன்பணத் தொகை உயா்வு: அரசாணை வெளியீடு
பண்டிகை கால முன்பணத் தொகை உயா்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட உத்தரவு விவரம்:
அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களைச் சோ்ந்தவா்களுக்கு பண்டிகை கால முன்பணத் தொகை ரூ. 10,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை உயா்த்துவதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். அதன்படி, அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், அவா்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பண்டிகை கால முன்பணம் ரூ. 20,000-ஆக உயா்த்தப்படும் என்று அறிவித்தாா்.
முதல்வரின் இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், பண்டிகை கால முன்பணமானது ரூ.10,000-இல் இருந்து ரூ.20,000-ஆக உயா்த்தப்படுகிறது.
அதேசமயம், பண்டிகை கால முன்பணத்துக்கு ஒப்புதல் அளிப்பது அதைத் திரும்பப் பெறுவது போன்ற செயல்பாடுகளில் ஏற்கெனவே உள்ள நடைமுறைகளே தொடரும். இனிவரும் பண்டிகைககள் அனைத்துக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவித்துள்ளாா்.