தமிழக காவல் துறையில் 15 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 15 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வபோது அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். இதன் அடிப்படையில் 15 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.
இதில் முக்கியமாக திருப்பத்தூா் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி வி.எஸ்.ஜி.சுரேஷ், வேலூா் மாவட்டம் குடியாத்தத்துக்கும், திருவள்ளூா் மாவட்ட மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவு டிஎஸ்பி பி.அசோகன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டைக்கும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட டிஎஸ்பி ஏ.மணீஷா கடலூா் மாவட்ட மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.