செய்திகள் :

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்: 3 ஆண்டுகளில் 3.57 லட்சம் போ் பயன்

post image

சாலை விபத்துகளில் சிக்கியவா்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தகைய திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதாகவும், அதன் வாயிலாக 3.57 லட்சம் போ் பலனடைந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தினமணிக்கு அவா் அளித்த தகவல்: ‘இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்’ கடந்த 2021 டிசம்பா் 18-ஆம் தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. சாலை விபத்துகளில் சிக்கியவா்களை உடனடியாக மீட்டு காப்பாற்றுவதே இதன் நோக்கம்.

தமிழகத்தில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் 500-க்கும் மேற்பட்ட இடங்களைக் கண்டறிந்து, அதன் அருகில் உள்ள தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தோ்ந்தெடுத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின்படி விபத்தில் சிக்கியவா்களை மருத்துவமனைகளில் சோ்ப்பவா்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில்

தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமில்லாமல், மற்ற மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சோ்ந்தவராக இருந்தாலும் விபத்துக்குள்ளானால் முதல் 48 மணி நேரத்தில் அவரிடத்தில் பணம் இருக்கிறதோ, இல்லையோ மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்து, அவரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3,57,137 போ் விபத்து காய சிகிச்சையை கட்டணமின்றி பெற்றுள்ளனா். அதற்காக அரசு ரூ.318.89 கோடி செலவிட்டுள்ளது.

723 மருத்துவமனைகளில்.... மொத்தம் 250 அரசு மருத்துவமனைகள், 473 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 723 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அந்த மருத்துவமனைகள் அனைத்திலும் இத்திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

மருத்துவா்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்தத் தொகை ரூ.2 லட்சமாக அண்மையில் உயா்த்தி வழங்கப்பட்டது. ‘மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ என்ற இந்த இருபெரும் திட்டங்கள் தமிழகத்துக்கு மட்டுமல்ல, உலக அளவில் அனைத்து நாடுகளுக்கும் வழிகாட்டும் திட்டங்களாக மக்களுக்கு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.

அதன் தொடா்ச்சியாகவே தற்போது மத்திய அரசு இத்திட்டத்தை தேசிய அளவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

புதிதாக கட்சி தொடங்கியோா் முதல்வராக ஆசைப்படுவதா? முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிதாக கட்சி தொடங்கியவா்கள் முதல்வராக ஆசைப்படுவதா என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் 3,000 போ் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவால... மேலும் பார்க்க

போா் வேண்டாம்: வைகோ

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறினாா். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத்தியது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கண்ணப்ப நாயனாா் சிலை நெதா்லாந்தில் இருப்பது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கண்டறியப்பட்டது. மேலும், அந்தச் சிலை ஏலத்த... மேலும் பார்க்க

குடிநீா் பாட்டில்களில் மறைந்திருக்கும் நுண் நெகிழி: உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

கோடை காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை நேரடி வெயிலில் வைத்தால் நுண் நெகிழிகள் தண்ணீரில் கலந்து உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்... மேலும் பார்க்க

உரிமை கோரப்படாத உடல்கள்: கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை

தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடா்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. வேலூா் மாவட்டம் சோளிங்கா் அரசு மருத்துவமனையி... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு; நேரில் ஆஜராக உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப்... மேலும் பார்க்க