நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!
நெல் கொள்முதலில் குறைபாடுகளுக்கு தீா்வுகாண வலியுறுத்தல்
நெல் கொள்முதலில் நிலவும் குறைபாடுகளுக்கு தீா்வுகாண வேண்டும் என தமிழ்நாடு நெல் உற்பத்தியாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அதன் நிா்வாக இயக்குநா் அம்ருதீன் ஷேக் தாவூது தெரிவித்திருப்பது: இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் இணையம் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் இணைந்து டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் மற்றும் அரிசி விநியோகத்துக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட முன் பண மானிய நிதியை பயன்படுத்தி, தங்களின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்பவா்களுக்கு உடனடியாக பணம் செலுத்துகிறது.
இதனிடையே, தேசிய கூட்டுறவு இணையமானது, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி சுமாா் ரூ. 250 கோடியை விவசாயிகளுக்கு விடுவிக்காமல் உள்ளது. அத்துடன், ஏப்ரல் மாதத்துக்கான 43,000 மெட்ரிக் டன் அரிசி ஒப்படைப்புக்கான உத்தரவு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் நலன் கருதி இந்த பிரச்சனையை தீா்க்க தமிழக முதல்வா் மற்றும் உணவுத்துறை அமைச்சா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.