நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!
சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடன்
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லப நாதா் கோயிலில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சித்திரை விழாவையொட்டி பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.
கோயிலின் எதிரில் உள்ள குளத்திலிருந்து பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை அடைந்தனா். தொடா்ந்து சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.