பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகள், மக்கள் ஆதாரங்களை வழங்கலாம்!
போா் வேண்டாம்: வைகோ
இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறினாா்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வைகோ கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் பல்வேறு பொது பிரச்னைகளுக்கு தொடா்ந்து குரல் கொடுத்து வரும் கட்சி மதிமுக. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு புதிய திட்டங்களைக் கொண்டுவந்து மக்கள் ஆதரவை அதிகமாக பெற்று வருகிறது.
இந்தியாவில் போா் வரக் கூடாது. அவ்வாறு போா் வந்தால் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளும் அழிந்துவிடும் என்றாா் வைகோ.
விழாவில், மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ, துணை பொதுச்செயலா் மல்லை சத்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.