ரஷியப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இ...
கோல்கீப்பிங்கில் மாஸ்டர் கிளாஸ்..! சாதனை படைத்த இன்டர் மிலன் கோல்கீப்பர்!
இன்டர் மிலன் அணியின் கோல்கீப்பர் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் இன்டர் மிலன் அணி 4-3 (7-6) வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் இன்டர் மிலன் அணியின் டிஃபென்ஸ் மிகவும் பலமாக இருந்தது.
இரண்டாம் கட்ட அரையிறுதியில் பார்சிலோன அணி 72 சதவிகிதம் பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் பெரிதாக கோல்கள் அடிக்க முடியவில்லை.
இதற்கு முக்கிய காரணம் இன்டர் மிலனின் டிஃபெண்டர்கள் மட்டுமல்ல, அந்த அணியின் கோல் கீப்பர் யான் சோமரும்தான். 37 வயதான இவர் இந்த சீசனில் அசத்தி வருகிறார்.
இந்த சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனாவுடனான அரையிறுதியில் (இரண்டு கட்ட போட்டிகள்) 14 கோல்களை தடுத்துள்ளார்.
2ஆம் கட்ட போட்டியில் இலக்கை நோக்கி அடிக்கப்பட்ட 10 பந்துகளையும் தடுத்து அசத்தினார். அதனால்தான் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.
கடைசி 15 சீசன்களில் சாம்பியன்ஸ் லீக்கில் இவ்வளவு முறை தடுத்த கோல்கீப்பர்கள் வரிசையில் 2ஆம் இடம் பிடித்து யான் சோமர் சாதனை படைத்துள்ளார்.
Yann Sommer #UCL | @Inter_espic.twitter.com/JkOGYYEhG9
— Liga de Campeones (@LigadeCampeones) May 6, 2025