பிளஸ் 2: அரசுப் பள்ளி மாணவர்கள் 91.94% தேர்ச்சி! மற்ற பள்ளிகள்?
ஜி.வி.பிரகாஷ் குமாருடன் கயாது லோஹர்!
நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளராக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் பிஸியாக நடிகராக நடித்து வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் 25ஆவது படமாக வெளியான கிக்ஸ்டன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது, 3 திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. நடித்துள்ள புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் மே.9ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
ஏகே ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தனது 2ஆவது படமாக இந்தப் படத்தை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.
நந்திவர்மன் என்ற படத்தினை இதற்கு முன்பாக ஏகே ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தது.
ஜி.வி.பிரகாஷ் படத்தில் நடிகை கயாது லோஹர் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Every door hides a deeper story ✨
— Mariyappan Chinna (@DirMari_Chinna) May 7, 2025
Here it's the Production No 2 announcement from the @AKfilmfactory
Starring : @gvprakash & @11Lohar
Produced by : @arun_kumaroffl
Directed by : @DirMari_Chinna
First Look releasing on MAY 9TH @SamCSmusicpic.twitter.com/akG9egpOpL