செய்திகள் :

'இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் இருக்கிறது; அதனால்...' - அமெரிக்க காங்கிரஸை சேர்ந்த இந்தியா வம்சாவளி!

post image

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இது குறித்து அமெரிக்கா காங்கிரஸை சேர்ந்த ரோ கண்ணாவிடம் கேள்வி எழப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு ரோ கண்ணா, "இரு நாடுகளுமே அணு ஆயுதங்களை வைத்துள்ளது. இப்போதைய அவசர தேவை பதற்ற நிலையை குறைப்பது ஆகும்.

பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதர்கு இந்தியா சில தீவிரவாத முகாம்களை அழித்து பதிலடி கொடுத்தது.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

இரு நாடுகள் பல ஆண்டுகளாக சண்டை போட்டுகொள்வதற்கு ஒரே காரணம் தான். அது பிரிட்டிஷ் காலனி இரு நாடுகளுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கியது... இந்து, முஸ்லீம்களிடம் பிரிவினையை உருவாக்கியது.

இரு பிரதேசங்களையும் நன்கு புரிந்து, பதற்றத்தை குறைக்கும் நல்ல நடுநிலையாளர் வேண்டும்.

நாம் அசிம் முனீர் ஒரு சர்வாதிகாரி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவர் சட்டரீதியான எந்தத் தேர்தலையும் நடத்தவில்லை. இம்ரான் கானை சிறையில் அடைத்திpருக்கிறார். இப்போது பாகிஸ்தானில் எந்த நியாயமான குரலும் ஒலிப்பதில்லை. காரணம், சர்வாதிகாரம். பதற்ற நிலை குறைப்பிற்கு பிறகு, அங்கே நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும்.

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வேண்டும். பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எஃப் கடன் கொடுக்கிறது. அதை அவர்கள் நம்பி இருக்கிறார்கள். அசிம் முனீரிடம் இம்ரான் கானை விடுவிக்க சொல்ல வேண்டும். பதிலடியை நிறுத்த சொல்ல வேண்டும். மேலும், அங்கே நியாயமான தேர்தல் வேண்டும்" என்று பதிலளித்தார்.

யார் இந்த ரோ கண்ணா?

இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவர். இவரது பெற்றோர் பஞ்சாப்பில் இருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவரது தாய் வழி தாத்தா அமர்நாத் வித்யாலங்கார் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் மக்களவை உறுப்பினர் ஆவார்.

ரோ கண்ணா தற்போது அமெரிக்கா காங்கிரஸில் உறுப்பினராக இருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர்.

"தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் இன்னும் இருக்கின்றன; ஆனால்..." - முத்தரசன் சொல்வது என்ன?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவிற்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பத்திரிகையாளர் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், "ஏப்ரல் 22ம்... மேலும் பார்க்க

NCP : `அஜித் பவார் - சுப்ரியா சுலே முடிவு செய்வார்கள்’ - அணிகள் இணைவதில் இறங்கி வந்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் ஆண்டு திடீரென இரண்டாக உடைந்தது. சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் கட்சியை இரண்டாக உடைத்ததோடு, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் இருப்பதாக கூறி கட்சியையும், சின... மேலும் பார்க்க

முடக்கப்பட்ட 'The Wire' இணையதள பக்கம் - செய்தி நிறுவனம் சொல்வதென்ன?

'The Wire' இணையதளம் மத்திய அரசால் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."அன்பிற்குரிய 'தி வயர்' வாசகர்களுக்கு,இந்திய அர... மேலும் பார்க்க

3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி - போர் பதட்டமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து... மேலும் பார்க்க

"கடவுளே... நாட்டை காப்பாற்றுங்கள்" - பாக். நாடாளுமன்றத்தில் அதன் முன்னாள் ராணுவ மேஜர் பேசியது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத இடங்களில் தாக்குதலை நடத்தியது இந்தியா. 'இதற... மேலும் பார்க்க

India - Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா - பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து வருகிறது.இதுவரை இந்தத் தாக்குதலில் நடந்த முக்கிய 10 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்...ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் பிர... மேலும் பார்க்க