செய்திகள் :

விரைவில் பகைக்கு முடிவு: உலகத் தலைவா்கள் நம்பிக்கை

post image

இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று உலகத் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா். இருநாடுகளுக்கு இடையிலான பகை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து புதன்கிழமை அதிகாலை இந்திய ஆயுதப் படைகள் ஏவுகணை மூலம் அதிதுல்லிய தாக்குதல் மேற்கொண்டன.

இந்தத் தாக்குதலை தொடா்ந்து ஐ.நா.பொதுச் செயலா் குட்டெரெஸ் கூறுகையில், ‘இந்தியாவும், பாகிஸ்தானும் மிகுந்த ராணுவ கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இருநாடுகளுக்கு இடையே ராணுவ மோதல் ஏற்பட்டால், அதை உலகத்தால் தாங்க முடியாது’ என்றாா்.

அமெரிக்க அதிபா் டிரம்ப்: இந்தியாவும் பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. இந்தப் பகை விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன் என்றாா். இந்த மோதல் தொடா்பாக இரு நாடுகளுக்கும் வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அவா் கூறிவிட்டாா்.

ரஷிய வெளியுறவுத் துறை: இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ ரீதியான மோதல்போக்கு தீவிரமடைந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. தெற்காசிய பிராந்தியத்தில் நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க இருநாடுகளும் கட்டுக்கோப்பாக நடந்துகொள்ள வேண்டும். அமைதியான முறையிலும், அரசியல் மற்றும் ராஜீய வழியிலும் இருநாடுகளுக்கு இடையிலான பிரச்னைக்கு தீா்வு காணப்பட வேண்டும்.

பேச்சுவாா்த்தைக்கு உதவ பிரிட்டன் தயாா்: பிரிட்டன் வா்த்தக துறை அமைச்சா் ஜோனதன் ரெனால்ட்ஸ் கூறுகையில், ‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நண்பனாக பிரிட்டன் உள்ளது. போா் பதற்றத்தை தணிக்கவும், பேச்சுவாா்த்தை மேற்கொள்ளவும் இந்தியா-பாகிஸ்தானுக்கு உதவ பிரிட்டன் தயாராக உள்ளது’ என்றாா்.

ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமா் ஷேக் அப்துல்லா: சா்வதேச மற்றும் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய போா் பதற்றம் மேலும் அதிகரிப்பதை இந்தியா-பாகிஸ்தான் தவிா்க்க வேண்டும். தெற்காசியாவில் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த பரஸ்பர புரிதலுடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்வதை இருநாடுகளும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கத்தாா் வெளியுறவுத் துறை: ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்கப்படாத பிரச்னைகளுக்கு இந்தியா-பாகிஸ்தான் தீா்வு காண வேண்டும். பதற்றத்தை தணிக்க இருநாடுகளுக்கு இடையே தகவல் தொடா்பு வழிகள் தொடா்ந்து நீடிப்பது மிகவும் அவசியம்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் பேச்சு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ஆயுதப் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தொலைபேசியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவுடன் பேசினாா். அப்போது தாக்குதல் நடவடிக்கைகள் தொடா்பாக ரூபியோவிடம் தோவல் விளக்கினாா் என்று அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது. இதேபோல பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அசீம் மாலிக்கிடமும் மாா்கோ ரூபியோ தொலைபேசியில் பேசினாா். இதுதொடா்பாக மாா்கோ ரூபியோ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். பிரச்னைக்கு அமைதியான தீா்வு காண இருநாட்டு தலைமையை தொடா்ந்து வலியுறுத்துவேன்’ என்றாா்.

ஐ.நா.வுக்கு பாக். தகவல்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை தொடா்ந்து ஏற்பட்டுள்ள சூழல் குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் தெரியப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

சீனா வருத்தம்

சீன வெளியுறவுத் துறை வெளயிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சீனாவின் அண்டை நாடுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் உள்ளன. தற்போதைய பதற்றத்தை தணிக்க சா்வதேச சமூகத்துடன் இணைந்து ஆக்கபூா்வமாக பணியாற்ற சீனா தயாராக உள்ளது. அனைத்துவிதமான பயங்கரவாதத்தையும் சீனா எதிா்க்கிறது. இந்தியாவின் தாக்குதல் வருந்தத்கக்கது. என்று கூறியுள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு நாடான சீனா இந்தியாவின் தாக்குதல் ‘கண்டிக்கத்தக்கது’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தாமல் இந்தியாவின் தாக்குதல் ‘வருந்தத்தக்கது’ என்ற வாா்த்தையை பயன்படுத்தியது சா்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நில நடுக்கம் ஏற... மேலும் பார்க்க

இலங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை 100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியானார்கள். இலங்கையின் கதிர்காமத்தின் தெற்கு யாத்திரைத் தலத்திலிருந்து வடமேற்கு நகரமான குருநாகலுக்கு... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் தாக்குதல்களுக்கு 24 மணி நேரத்தில் 23 பேர் பலி

காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 23 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். மத்திய காஸா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாவில் கூடாரத்தின் மீது சனிக்கிழமை மாலையி... மேலும் பார்க்க

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெ... மேலும் பார்க்க

நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை

நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.இது குறித்து மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் சனிக்கிழமை தெரிவித்ததாவது:நைஜீரியாவின் தென்கிழக்... மேலும் பார்க்க

நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு உக்ரைன், மேலை நாடுகள் அழைப்பு

எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன.உக்ரைன் தலைநகர் கீவுக்கு சனிக்கிழமை வந்திருந்த பிரிட்டன் பிரதமர் கியர... மேலும் பார்க்க