செய்திகள் :

India - Pakistan: `வலிமை மற்றும் வீரியத்துடன் கையாண்ட மோடிக்கு எனது பாரட்டுகள்'- ரஜினிகாந்த்

post image

பஹல்காம் தீவிரவாதத்  தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.

இதன் மூலம்  பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.

இதனால் பாகிஸ்தான், இந்திய எல்லை பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர்
Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர்

இருப்பினும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றைச் சுட்டு வீழ்த்தியது.

தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தது.

இந்நிலையில் நேற்று(மே 10) மாலை இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று(மே 11) விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் முப்படை வீரர்களுக்கும், மோடி மற்றும் அமித் ஷாவிற்கு தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.

ரஜினி
ரஜினி

" பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு எனது மனமார்ந்தப் பாராட்டுகள்.

இந்தப் பிரச்னையை வலிமை மற்றும் வீரியத்துடன் கையாண்டு கொண்டிருக்கும் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷா  மற்றும் முப்படை வீரர்களுக்கும் எனது மனமார்ந்தப் பாராட்டுகள்” என்று  வாழ்த்தி இருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விழுப்புரம்: மேடையில் மயங்கி விழுந்த விஷால்; ``முழுமையான ஓய்வு தேவை'' - மருத்துவமனை சொல்வதென்ன?

நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், நடிகர் விஷால் மயங்கி விழுந்தது பேசுபொருளாகி உள்ளது.விழுப்புரத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில், நேற்று தென்னிந்திய திருநங்கைகள... மேலும் பார்க்க

``நேற்று வந்த விஜய் சாரைப் பார்த்து உதய் அண்ணா பயப்படுறார்ன்னு சொல்றதை...'' - திவ்யா சத்யராஜ் பேட்டி

சமீபத்தில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யாராஜ் பதிவிட்ட கருத்து, சமூக வலைதளங்கள் எங்கும் பேசுபொருளாகி இருக்கிறது.அதுவும், “அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பெண்களைத் அவமதிப்பதில்லை. அவர்கள் கோழைகள்... மேலும் பார்க்க

'தோனியை ரொம்ப பிடிக்கும், அவரால்தான்...' - தோனி குறித்து நெகிழும் மீனாட்சி சௌத்ரி

நடிகை மீனாட்சி சௌத்ரி தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் பற்றி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.‘தி கோட்’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களின் மூலம் திரையுலகில் கவனம் பெற்றவர... மேலும் பார்க்க

' என்னுடைய சிறந்த தருணங்கள் எல்லாவற்றுக்கு பின்னாலும் அம்மாதான் இருந்தாங்க'- நெகிழும் மீனா

நடிகை மீனா அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றரைப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மக்கள் இந்த சினிமா மூலமான ஈர்ப்பையும், ... மேலும் பார்க்க

'தம்பியின் கனவை அண்ணன்கள் நிறைவேற்றி இருக்காங்க' -பிரேம்குமாருக்கு THAR பரிசளித்த சூர்யா, கார்த்தி

‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில், சூரியாவின் 2D நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப்... மேலும் பார்க்க

`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்...' - எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்ட் பேமிலி இயக்குநர்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பல... மேலும் பார்க்க