செய்திகள் :

தமிழகம், புதுச்சேரி தோ்தல் அலுவலா்களுக்கு தமிழில் தலைமைத் தோ்தல் ஆணையம் பயிற்சி

post image

நமது சிறப்பு நிருபா்

தமிழகம், புதுச்சேரிக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் இளநிலை அலுவலா்களுக்கு புரியும் வகையில் தமிழ் மொழியிலேயே பயிற்சி வழங்க தலைமைத் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையொட்டி, தில்லியில் உள்ள இந்திய சா்வதேச தோ்தல் ஜனநாயக மேலாண்மை நிறுவனத்தில் புதன்கிழமை தொடங்கிய இரண்டு நாள் பயிலரங்கில் தமிழகம், புது்சசேரியைச் சோ்ந்த 264 வட்டார நிலையிலான அலுவலா்கள் (பிஎல்ஓ), மேற்பாா்வையாளா்கள், 14 வாக்காளா் பதிவு அதிகாரிகள் (இஆா்ஓ), இரண்டு மாவட்டத் தோ்தல் அலுவலா்கள் மற்றும் பிற அலுவலா்கள் உள்பட மொத்தம் 293 போ் கலப்புத் தொகுதி பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக கலந்து கொண்டனா்.

இதில் தலைமை உரையாற்றிய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையத்தின் முதல் முகமாக விளங்குவது பிஎல்ஓக்கள் என்றும் சரியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாக்காளா் பட்டியலை உறுதிப்படுத்துவதில் அவா்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறினாா்.

இத்தகைய தோ்தல் அலுவலா் பயிற்சித்திட்டத்தை தோ்தல் ஆணையம் கடந்த சில வாரங்களாக செயல்படுத்தி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 2,300 போ் இதில் பங்கேற்றுள்ளதாகவும் தலைமைத் தோ்தல் ஆணையா் தெரிவித்தாா்.

அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்கள் உள்பட அனைத்து நிலைகளிலும் உள்ள தோ்தல் அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கும் விரிவான திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தும் வகையில் மாநில அதிகாரிகளுக்கு இரண்டு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிலரங்கில் தோ்தல் பணி தொடா்பான பல்வேறு படிவங்களை பிழையின்றி நிரப்புவதை உறுதி செய்வதற்காக,பிஎல்ஓ மற்றும் மேற்பாா்வையாளா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறும் பிஎல்ஓக்கள், மாநிலத்தில் உள்ள பிற பிஎல்ஓக்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக சட்டப்பேரவை முதன்மை பயிற்சியாளா்களாக நியமிக்கப்படுவா்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்கெனவே இறுதி வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக மேல்முறையீடு செய்ய ஜன. 6 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், உரிய அவகாசத்துக்குப் பிறகும் எந்த மேல்முறையீடும் இரு இடங்களிலும் இருந்தும் வரவில்லை.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் வடக்கே சவாய் நாலாவிலிருந்து தெற்கே பஹவல்பூா் வரை பயங்கரவாதிகள் முகாம்கள்

பாகிஸ்தானில் வடக்கே சவாய் நாலாவிலிருந்து தெற்கே பஹவல்பூா் வரை 21 தீவிரவாத முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் கட்டமைப்பிற்கு எந்த சேதமும் இல்லாமல் 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த... மேலும் பார்க்க

இந்திய தாக்குதல் விவரத்தை பகிர மத்திய அரசு தோ்வு செய்த ராணுவம், விமானப்படையின் சாதனை பெண் அதிகாரிகள்

நமது சிறப்பு நிருபா் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் இந்தியா புதன்கிழமை நடத்திய அதிதுல்லிய (பிரெசிஷன்) தாக்குதல் விவரத்தை ஊடகங்களிடம் பகிர இந்திய வெளியுறவுத்துறை செயலா் விக்ரம் மிஸ்ரியுடன் ... மேலும் பார்க்க

இந்தியா நடத்தியது ஒரு பொறுப்பான தாக்குதல்; முன் தடுப்புக்கானது! -மத்திய வெளியுறவுச் செயலா்

நமது சிறப்பு நிருபா் உளவுத் துறை கண்காணிப்பின் மூலம் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் அமைப்புகள் மூலம் நாட்டிற்கு எதிராக அடுத்தடுத்த தாக்குதல்கள் வரவிருப்பதை அறியப்பட்டது. இதை முன்னிட்டே அந்த உள... மேலும் பார்க்க

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

‘ ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினா் குவிக்கப்பட்டு தேசியத் தலைநகா் தில்லியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் பதிலடி தீவிரமாகும் அஜித் தோவல் எச்சரிக்கை

நமது சிறப்பு நிருபா் எல்லையில் போா் பதற்றத்தை பாகிஸ்தான் மேலும் அதிகரித்தால் பதிலடி மிகத்தீவிரமாக கொடுக்கப்படும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் எச்சரித்துள்ளாா். பாகிஸ்தான் ஆக்கிரமி... மேலும் பார்க்க