பாக். தாக்குதலில் இந்தியா தரப்பில் உயிரிழப்பு இல்லை: ராணுவம்
பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலில் இந்தியா தரப்பில் எந்தவித உயிரிழப்புகளும் இல்லை என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நடுவானிலேயே இந்திய ராணுவம் அவற்றை தாக்கி அழித்தது. இதனால், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டு அனைவரும் உஷார் நிலையில் உள்ளனர்.