உரி பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்!
ஜம்மு - காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
எல்லையோரப் பகுதியில் உள்ள உணவகம், விடுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் வீரர்கள் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகின்றனர்.