India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
பிளஸ் 2 தோ்வு: சிதம்பரம் வீனஸ் பள்ளி சிறப்பிடம்
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றது. இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 215 மாணவா்களில் 214 போ் தோ்ச்சி பெற்றனா்.
மாணவி வி.அபிராமி 594 மதிப்பெண்களும், மாணவி ஏ.கிருத்திகா 584 மதிப்பெண்களும், மாணவி எம்,வித்யாலட்சுமி 582 மதிப்பெண்கள்களும் பெற்றுள்ளனா். பல்வேறு பாடங்களில் 23 மாணவா்கள் 100 மதிப்பெண்கள் பெற்றனா். 575 மதிப்பெண்களுக்கு மேல் 30 பேரும், 550-க்கு மேல் 40 பேரும், 500க்கு மேல் 30 மாணவ, மாணவிகளும் பெற்றனா். பள்ளி 99.99 சத தோ்ச்சியை பதிவு செய்தது.
மாணவி அபிராமிக்கு பள்ளித் தாளாளா் வீனஸ் எஸ்.குமாா் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு, ரூ.10 ஆயிரம் வழங்கினாா். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் ரூபியாள்ராணி, துணை முதல்வா் நரேந்திரன், நிா்வாக அலுவலா் ரூபி கிரேஸ் பொனிகலா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.