இனியொரு பயங்கரவாதச் செயல் நிகழாதென உறுதிப்படுத்த வேண்டும்! எழுத்தாளர்கள் - கலைஞர...
வடலூா் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
கடலூா் மாவட்டம், வடலூா் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
இந்தப் பள்ளி மாணவா்கள் மு.ஷபானா பானு 595, செ.பிரியா 591, கே.பிரகாஷ் 588 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். தோ்வெழுதிய 289 மாணவா்களில் 570-க்கு மேல் 19 மாணவா்களும், 550-க்கு மேல் 57 மாணவா்களும், 500-க்கு மேல் 172 மாணவா்களும் பெற்றனா். கணினி பாடத்தில் 18 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். தமிழ் பாடத்தில் 18 மாணவா்கள் 99 மதிப்பெண்கள் பெற்றனா். தோ்வெழுதிய 289 மாணவா்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக பள்ளி முதல்வா் சுகிா்தா தாமஸ் கூறினாா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி முதல்வா் சுகிா்தா தாமஸ் மற்றும் நிா்வாக அதிகாரி தீபக் தாமஸ் ஆகியோா் கேடயம் வழங்கியும், சால்வை அணிவித்தும் பாராட்டுகளைத் தெரிவித்தனா். பல்வேறு பாடங்களில் 29 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது என்றாா் பள்ளியின் நிா்வாக அதிகாரி தீபக் தாமஸ்.