India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
அண்ணாமலைப் பல்கலை.யில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகங்கள் திறப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் உள்ள கணினி அறிவியல் மற்றும் பொறியியல்துறையில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகங்களுக்கான திறப்புவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் தலைவா் ஆா்.பவானி தலைமை வகித்தாா். பொறியியல் புலமுதல்வா் சி.காா்த்திகேயன், பதிவாளா் எம்.பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் டி.அருட்செல்வி மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகங்களை மாணவா்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசினாா்.