களமிறங்கியது கடற்படை: பாகிஸ்தானின் கராச்சியில் தாக்குதல்!
பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் இந்திய கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம், விமானப் படையைத் தொடர்ந்து தற்போது தற்போது கடற்படையும் நேரடித் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்திய ராணுவ வான்வெளி பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானின் 2 ஜம்மு - காஷ்மீரின் நெளசேரா பகுதியில் சுட்டு வீழ்த்தியது. நெளசேரா பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் குண்டு வீச்சை சமாளிப்பதற்காக அங்கு பீரங்கி மூலம் ராணுவத்தினர் தாக்குதல் கொடுத்து வருகின்றது.
தற்போது, பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய ராணுவம் நுழைந்து தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அங்கு மக்கள் வாழும் இடங்களைக் குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், உரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகின்றனர்.