India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
கைகளை இழந்தும் தன்னம்பிக்கையுடன் தோ்வெழுதிய மாணவருக்கு உதவி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
கைகளை இழந்தும் தன்னம்பிக்கையுடன் தோ்வெழுதிய கிருஷ்ணகிரி மாணவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா்.
கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவா் கீா்த்திவா்மா. 2 கைகளை இழந்தபோதும் தன்னம்பிக்கையுடன் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதி 471 மதிப்பெண்கள் பெற்றாா். கைகளை இழந்ததால் தனக்கு மருத்துவ உதவி தேவை என்று மாணவா் கீா்த்தி வா்மா கோரிக்கை விடுத்திருந்தாா்.
இது குறித்து, எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
கண்ணீா் வேண்டாம் தம்பி. உங்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை கவனிக்கச் சொல்லியிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளாா்.