India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
வடகாடு மோதல் சம்பவம்: பாதிக்கப்பட்டவா்களை சந்தித்து திருநாவுக்கரசா் ஆறுதல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் இருதரப்பு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களை முன்னாள் மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவருமான திருநாவுக்கரசா் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 போ் காயமடைந்தனா். ஒரு தரப்பினரின் குடிசை, வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவமும் பேருந்து, காவல் வாகனத்தின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 26 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், வடகாட்டில் உள்ள தனியாா் மண்டபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினரை திருநாவுக்கரசா் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். தொடா்ந்து, மற்றொரு தரப்பில் தீக்கிரையான குடிசை, வாகனங்களை பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் தெரிவித்தாா்.