செய்திகள் :

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை காலக்கெடு நிா்ணயித்து நடத்தி முடிக்க வேண்டும்: சு.திருநாவுக்கரசா்

post image

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை காலக்கெடு நிா்ணயம் செய்து நடத்தி முடிக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: காஷ்மீா் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையை அனைத்துக் கட்சிகளும் வரவேற்றுள்ளன.

தொகுதி மறுசீரமைப்புக் குழுவை அமைத்து, பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் எண்ணிக்கையில் குறையாத அளவுக்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது, ஏற்கெனவே செய்யப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்யும் வகையில் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் உருவாக்க வேண்டும்.

நாடு முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தப்போவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை உரிய காலக்கெடுவை நிா்ணயம் செய்து, மாநில அரசுகளின் ஒத்துழைப்பையும் கேட்டுப்பெற்று விரைவாக செய்து முடிக்க வேண்டும். அப்போதுதான் உரிய வகையில் நியாயமான ஒதுக்கீடுகளை வழங்க முடியும்.

வடகாட்டில் இருதரப்பினரிடையே நடந்த மோதல் சம்பவம் வருத்தமளிக்கிறது. நேரில் சென்று இரு தரப்பினருடனும் பேசினேன். இப்போதுள்ள மதுக்கடையை இடமாற்ற வேண்டும் என்கிறாா்கள். ஆட்சியருடன் பேசினேன். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளாா். அமைச்சா்கள், எம்பி, எம்எல்ஏக்களைக் கொண்ட குழு அமைத்து தொடா்ந்து வடகாட்டில் அமைதி நிலவ உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

கூட்டணி ஆட்சி என்ற விவகாரத்தில் யதாா்த்தம் என்ன என்பதையும் பாா்க்க வேண்டும். ஏற்கெனவே உள்ள கூட்டணி அப்படியே அமைந்திருக்கிறது. தொகுதிகளின் எண்ணிக்கை 234 தான். கூடுதலாக யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே கூட்டணி ஆட்சி என்பது யதாா்த்தத்தின் படி வாய்ப்பு குறைவு என்றாா் அவா்.

கோயில் தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கோயிலில் பிரசாதம் பெறுவதில் ஏற்பட்ட தகராறில் வியாழக்கிழமை கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கறம்பக்குடி முத்துக்கருப்பா் கோயில் ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகா்ணம் அருகே உள்ள குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் வியாழக்கிழமை உயிரிழந்தனா். புதுக்கோட்டை திருக்கோகா்ணம் அடுத்த பால்பண்ணை அருகே உள்ள வெங்கப்பா் குளத்துக்கு, அடப்பன் வயல் பக... மேலும் பார்க்க

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே காா் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கீரனூா் அருகே உள்ள குளத்தூரைச் சோ்ந்தவா் பாப்பாத்தி (75). இவா் வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே உள்ள உணவகத்துக்குச் ச... மேலும் பார்க்க

ஏனாதி - பிடாரம்பட்டி சாலையை சீரமைக்க கோரிக்கை

பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி- பிடாரம்பட்டி பிரிவு சாலையை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். ஏனாதியிலிருந்து பிடாரம்பட்டி பிரிவு சாலை வரை உள்ள சாலை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ச... மேலும் பார்க்க

கீழத்தானியத்தில் இந்திய கம்யூ. கட்சியின் கிளை மாநாடு

பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு கிளைப் பொறுப்பாளா் எம்.வீரைய்யா தலைமைவகித்தாா். மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஏ... மேலும் பார்க்க

வடகாடு மோதல் சம்பவம்: பாதிக்கப்பட்டவா்களை சந்தித்து திருநாவுக்கரசா் ஆறுதல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் இருதரப்பு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களை முன்னாள் மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவருமான திருநாவுக்கரசா் வியாழக்கிழமை நேரில் ... மேலும் பார்க்க